Categories: latest news throwback stories

Flash Back: என்னது ஒரு காபி 80 ரூபாயா…? ஓட்டல் ரூமையே காலி பண்ணிய விஜயகாந்த்…!

கேப்டன் படங்களில் ராமவாசு இணை தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளார். வாஞ்சிநாதன், மரியாதை போன்ற படங்களில் பணியாற்றியபோது நடந்த சில மறக்கமுடியாத சம்பவங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். என்ன சொல்கிறார்னு பாருங்க.

யாரையும் மனசு நோகாம பேசணும்னு நினைக்கிறவர் விஜயகாந்த். தயாரிப்பாளருக்கு எவ்வளவு நல்லவரா இருக்க முடியுமோ அந்தளவுக்கு நல்லவரா இருப்பார் விஜயகாந்த். ஷாஜி கைலாஷோட வாஞ்சிநாதன் படம் ஹைதராபாத் ராமோஜில சூட்டிங். காலையில 6 மணி இருக்கும். அவருடைய ஹோட்டல் வேற. நான் தங்கி இருந்தது வேற. கொஞ்ச தூரம் தான். எதிரெதிரில் இருந்தது.

அங்கே ஒருத்தர் லுங்கி கட்டிக்கிட்டு நடந்து வந்தாரு. லுங்கி கட்டிக்கிட்டு நடந்து வர்ற அளவுக்கு ஆர்டிஸ்ட் யாருன்னு போனா, கையில ஒரு பெட்டியோட கேப்டன் நடந்து வர்றாரு. ‘என்ன…?’ன்னு கேட்டேன். ‘நீங்க எங்கே தங்கி இருக்கீங்க?’ன்னு கேட்டாரு. ‘நான் எதிரில’ன்னு சொன்னேன். ‘நான் அங்கே வந்துடுறேன்’. ‘என்ன?’ன்னு கேட்டேன்.

‘அவன் காபி 80ரூபா போடுறாம்பா…’ன்னாரு. ‘அவன் போட்டா உங்களுக்கு என்ன?’ன்னு கேட்டேன். ’80 ரூபாய்க்கு காபி வாங்கிக் குடிச்சிட்டு என்ன பண்றது?’ன்னு கேட்டாரு. ‘நான் இங்கே வந்துடறேம்பா. இங்கே உள்ள காபி போதும். எனக்கு அந்தக் காபி வேணாம். 80ரூபா காபி குடிச்சா என்ன 20 ரூபா காபி குடிச்சா என்ன?’ன்னு கடைசியில எங்களோடவே தங்கிட்டாரு. நாலஞ்சு நாள் தான் சூட்டிங். இங்கே வந்துதான் தங்கினாருன்னு சொன்னார்.

அதே மாதிரி கடைசியா மரியாதை படம். டி.சிவா தான் தயாரிப்பாளர். அவர் கூட நான்தான் ஃபுல்லா இருந்தேன். பாங்காக்ல சாங் சூட்டிங். இறங்கின உடனே எனக்கும் டைரக்டர் விக்ரமனுக்கும் பயங்கர வாக்குவாதம். நான் எப்பவும் நியாயத்தையே பேசுவேன். அப்புறம் கேப்டன் வந்து விலக்கி விட்டாரு.

அடுத்த நாள்ல இருந்து 50 பர்சன்ட் மேனேஜர் கேப்டன். இங்கே இருந்து எந்திருச்சி அங்கே போய் சொல்வாரு. அங்கே இருந்து வந்து எங்கிட்ட சொல்வாரு. அப்போ ‘நீங்க ஒரு கட்சியோட தலைவர். எதுக்கு சார் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை?’ன்னு கேட்பேன். ‘இது படம். அது வேற. இங்கே உனக்கும், அவருக்கும் மனஸ்தாபம். அதுக்காக வேலையை நிறுத்த முடியாது. சூட்டிங் எடுக்க வந்துருக்கோம்.

அதை நல்லபடியா முடிச்சிட்டப் போகணும்’னு சொன்னாரு. நான் சொன்னேன். ‘என் மேல தப்புன்னு சொல்லுங்க. நாளைக்கே போய் சாரி கேட்குறேன்’னு சொன்னேன். அப்புறம் அந்தப் பஞ்சாயத்து முடிஞ்சது. எல்லா இடத்துலயும் கேப்டன் என்னைத் தூக்கி வச்சித்தான் பேசுவாரு.

கடைசில ஆடியோ ரிலீஸ்ல கூட விஜயகாந்த் எல்லாரும் ஒருத்தரை மறந்துட்டாங்க. ராம வாசு என்கிறவரை. அவரு கொஞ்சம் கட் அண்டு ரைட்டா பேசுவாரு. சிலருக்குப் பிடிக்கும். பலருக்குப் பிடிக்காம கூட இருக்கலாம். ஆனா எனக்கு ராமவாசுவை ரொம்பப் பிடிக்கும்னு சொன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v