புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஜெயலலிதா. இருவரின் படங்களும் பெரும்பாலும் சூப்பர்ஹிட்தான். எம்ஜிஆரைப் பொருத்தவரை ஒரு புது நடிகையைப் பார்த்ததும் பிடித்துவிட்டால் ஜோடியாக நடிக்க வைப்பார். அது ஒர்க் அவுட் ஆனால் தொடர்ந்து 5 படங்களில் அவர் தான் ஹீரோயின். அப்படித்தான் சரோஜாதேவி, ஜெயலலிதா, லதாவைச் சொல்லலாம். அந்த லிஸ்ட்ல வந்தவர் தான் நடிகை மஞ்சுளா.
ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் மஞ்சுளா. சாந்தி நிலையம் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தெலுங்கிலும் இவர் நடித்து பெயர் பெற்றார்.
ஒருமுறை ஏவிஎம் ஸ்டூடியோவில் மஞ்சுளாவின் போட்டோ ஷூட் நடந்ததாம். அப்போது எம்ஜிஆர் அந்த வழியாகப் போக, தற்செயலாக மஞ்சுளாவைப் பார்த்துள்ளார். அழகா துருதுருன்னு இருக்கிறாளே. இந்தப்பொண்ணு. நம்ம படத்துல கதாநாயகியாக நடிக்க வைக்கலாமேன்னு நினைத்து மஞ்சுளாவின் பெற்றோரிடம் கேட்டாராம். அதற்கு அவர்களும் உடனே சந்தோஷத்தில் சம்மதித்துள்ளார்களாம்.
அந்த வகையில் எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் தான் மஞ்சுளா ஜோடியாக நடித்த முதல் படம். சிறப்பான நடிப்பு. அப்போது 16 வயதுதான். அடுத்து உலகம் சுற்றும் வாலிபன், இதயவீணை, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன். ஒப்பந்தம் முடிந்ததும் சிவாஜியுடன் ஜோடி சேர்ந்தார் மஞ்சுளா.
அப்போது டாக்டர் சிவா, எங்கள் தங்க ராஜா, அவன்தான் மனிதன், என் மகன், அன்பே ஆருயிரே, மன்னவன் வந்தானடி, உத்தமன், அவன் ஒரு சரித்திரம், நெஞ்சங்கள் என்று வரிசையாகப் படங்களில் நடித்தார். மஞ்சுளாவைப் பொருத்தவரை அழகிலும் சரி. நடிப்பிலும் சரி. யாரும் குறை சொல்ல முடியாத சூப்பர் நடிகை.
சில நடிகைகள் அழகுப் பதுமையாக இருப்பார்கள். நடிப்பு ஒழுங்கா வராது. சில நடிகைகள் அழகின்றி இருப்பார்கள். ஆனால் சூப்பராக நடிப்பார்கள். ஆனால் அழகு, நடிப்பு இரண்டும் ஒருங்கே அமைந்தது என்றால் மஞ்சுளாவை நாம் சொல்லாமல் இருக்க முடியாது.
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…