தமிழ்த்திரை உலகில் எப்போதாவது சில ஆச்சரியமான சம்பவங்கள் நடப்பதுண்டு. என்னதான் ஆனாலும் ஹீரோக்கள் தான் நீண்ட நாள்களாக ஹீரோவாகவே சினிமா உலகில் நிலைத்து நிற்கின்றனர். ஹீரோயின்கள் மார்க்கெட் மற்றும் வயது இருக்கும் வரை மட்டும் தான் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் ஹீரோக்கள்தான் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லலாம். கமல், ரஜினி போன்ற பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் இன்று வரை அதே போல கதாநாயகர்களாகவே நடித்து வருகின்றனர்.
ஆனால் ஹீரோயின்களைப் பொருத்த வரை இன்று வரை 5 வருடங்களுக்கு தாக்கு பிடிப்பது என்பதே அரிதாக உள்ளது. திரிஷா, நயன்தாரா போன்ற ஹீரோயின்கள் தான் ஓரளவு தாக்குப் பிடித்து வருகின்றனர். அதே நேரம் அவர்களுக்கும் ஆரம்பத்தில் இருந்தது போல் தற்போது வரவேற்பு இல்லை என்றே சொல்லலாம்.
பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி இதுதான். தமிழ்த்திரை உலகில் மகளாக நடித்து அவருக்கே ஜோடியாக நடித்த நடிகைகள்னா யார் யார்னு கேட்க, அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். மகளாக நடித்து அவருக்கே ஜோடியாக நடித்த நடிகைகளில் குறிப்பிட்டுச் சொல்லணும்னா மீனாவைச் சொல்லலாம்.
ரஜினியோடு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் அப்படி நடித்து இருந்தார். பின்னாளில் அவருக்கே ஜோடியாக நடிக்கக்கூடிய வாய்;ப்பு கிடைத்தது. எஜமான், வீரா போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குகநாதனின் தயாரிப்பிலும், எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்திலும் உருவான படம் கனிமுத்து பாப்பா. ஜெய்சங்கர் நடித்த இந்தப் படத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் ஜெய்சங்கரின் மகளாக நடித்தவர் தான் ஸ்ரீதேவி. அதுக்குப் பிறகு டாக்சி டிரைவர், முடிசூடா மன்னன் போன்ற படங்களில் ஜெய்சங்கருக்கு ஜோடியாகவும் ஸ்ரீதேவி நடித்தார்.
Vijay TVK:…
தனுஷ் நடித்த…
Karur Vijay:…
கரூரில் நடந்த…
Karur: நடிகர்…