latest news
சிவாஜியை வைத்து ஏன் படமே எடுக்கல? மணிரத்னத்தோட பதில் நியாயம்தானா?
Published on
சிவாஜியை வைத்து ஏன் ஒரு படம் கூட இயக்கவில்லை என்று பத்திரிகையாளர் ஒருவர் இயக்குனர் மணிரத்னத்திடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதிலைப் பாருங்க.
சிவாஜியின் நகைச்சுவை: சிவாஜியை வைத்துத்தான் நான் திரையுலகிற்கே வந்தேன். அப்படிப்பட்ட மகாநடிகரை ஒரு திரைப்படத்திலாவது இயக்கணும் என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. ஒருமுறை மருத்துவமனையில் இருந்த எனது மகன் சிவாஜியை சந்தித்தபோது கூட ‘உங்க அப்பன்கிட்ட சொல்லி எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்கச் சொல்லுடா’ன்னு நகைச்சுவையாகக் கேட்டவர் சிவாஜி.
அப்படிப்பட்ட அசாத்திய கலைஞரை இயக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அமையலன்னா அதுக்கு முக்கிய காரணம் அவரை இயக்கக்கூடிய வகையில நல்ல கதை அமையாததுதான் என்றாராம் மணிரத்னம்.
கனவிலும் எதிர்பார்க்கவில்லை: அந்தக்கதை நிச்சயமாக அமைந்துவிடும். பின்னாளில் அவரை சந்தித்து அந்தக் கதையைச் சொல்லி அவரை இயக்கலாம் என்கிற எண்ணத்தில்தான் நான் இருந்தேன்.
ஆனால் அதற்குள்ளாக காலம் நம்மிடம் இருந்து அவரைப் பிரிக்கும் என்பதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று ஒரு பத்திரிகை பேட்டியிலே பகிர்ந்து கொண்டுள்ளார் மணிரத்னம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
நாயகன்: மணிரத்னம் எவ்வளவு பெரிய இயக்குனர். பல படங்களை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றவர். குறிப்பாக அவர் கமலை வைத்து இயக்கிய நாயகன் படம் எல்லாம் இன்னும் காலம் கடந்தும் பேசப்பட்டு வருகிறது. ரஜினி, மம்முட்டியை வைத்து தளபதி என்ற மாபெரும் வெற்றிப்படத்தைக் கொடுத்தார்.
பொன்னியின் செல்வன், தக் லைஃப்: பிரபு, கார்த்திக் கூட்டணியில் அக்னி நட்சத்திரம் கொடுத்தார். இதயகோவில், மௌனராகம், பகல்நிலவு, அஞ்சலி என அவரது படங்கள் எல்லாமே வேற லெவல். ரோஜா படத்துக்கு அவ்வளவு வரவேற்பு இருந்தது. பம்பாய், அலைபாயுதே, சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன். இப்போது கூட கமல், சிம்பு காம்போவில் தக் லைஃப் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார்.
இப்படி பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் மணிரத்னம். அப்படியிருக்க அவர் சிவாஜியை வைத்து இயக்குவதற்குக் கதையே அமையல என்று சொல்லிவிட்டாரே. இதெல்லாம் எந்த வகையில் நியாயம் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா.
TVK Vijay: தவெக தலைவரான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட...
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Karur: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...