Connect with us

latest news

வி.கே.ராமசாமி நஷ்டப்பட என்ன காரணம்? மகனாலயே அதைச் சொல்ல முடியாதாம்..!

நான்கு தலைமுறை நடிகர்களைப் பார்த்தவர், நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என ஒருசேர கலக்கியவர் தான் நடிகர் வி.கே.ராமசாமி. இவரது முழு பெயர் விருதுநகர் கந்தன் ராமசாமி. இவர் எப்படி சினிமாவில் நஷ்டப்பட்டார் என அவரது மகன் விகேஆர்.ரகுநாத் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

ரஜினி சாரும், அப்பாவும் நிறைய படங்கள் நடிச்சிக்கிட்டு இருந்தாங்க. நல்ல காமெடி காம்போ உண்டு. அப்பா உங்களை வச்சி பம்பாய் மெயில்னு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்குறோம். நடிச்சிக் கொடுக்கணும்னு கேட்டோம். டெபனைட்டான்னு சொன்னாரு ரஜினி.

அப்போ நாங்க படங்களை எடுக்குற நேரம் ரஜினி சார் ரொம்ப பீக்ல இருந்தாரு. இந்திப்படத்துக்குப் போயிட்டாரு. அதை ஞாபகத்துல வச்சிக்கிட்டுத்தான் மறக்காம அருணாச்சலம் படத்துல ஒன் ஆஃப் த பார்ட்னரா சேர்த்துக்கிட்டாரு.

சிவாஜி தான் வீட்டுக்கு வருவாரு. எம்ஜிஆரை நாங்க தோட்டத்துல போயி பார்ப்போம். சிவாஜி அவ்ளோ ஸ்டைலா வருவாரு. அவரு 100, 120 நடை நடந்துருப்பாரு. நாடகத்துல நடிப்பாராம். நடிச்சி முடிச்சதும் வேகமா அப்படியே போய் கார்ல ஏறிடுவாராம்.

எல்லாரும் வணக்கம் சொல்வாங்க. ஒண்ணும் சொல்லாமப் போயிடுவாராம். அப்புறம் அவரு ரொம்ப கர்வம் பிடிச்ச ஆளுன்னு நினைச்சாங்க. அப்புறம் அப்பா சொன்னதும்தான் தெரிந்தது. நாடகத்துல ஓவரா நடிக்கும்போது பிரஷர் அதிகமாகி மூக்கு வழியா ரத்தம் கொட்டுமாம். அதை யாரும் பார்க்கக்கூடாதுன்னு ஒரு துண்டை வச்சி மூடிக்கிட்டுப் போயிடுவாராம்.

படம் எடுத்ததால தான் நஷ்டம் ஆனாரு. இன்னும் சில விஷயங்கள் இருக்கு. அதை சொல்ல முடியாது. நிர்வாகக் கோளாறு. அப்பா பிசியா இருந்ததால யார் யாருக்கிட்டேயோ விட்டுட்டாரு. அவங்க மேனேஜ் பண்ண முடியல.

கஷ்டமான காலங்கள்ல சிவாஜி உதவுனாரான்னு கேட்டதுக்கு அவரு சிவாஜியை வச்சித்தான படம் எடுக்கிறாரு. அவரு நண்பர்கள்தானே. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுறதுதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்துல பொருளாளரா இருந்தார் வி.கே.ராமசாமி. அப்போ அவரு, சிவாஜி அப்பா, மேஜர் அங்கிள் எல்லாரும் சேர்ந்து அது எப்படி சங்கரதாஸ் கலையரங்கம் கட்டுறதுன்னு பேசுவாங்க. நிதிக்காக சிங்கப்பூர், மலேசியா போய்ட்டு வந்தாங்க.

முதன் முதலா இவங்க தான் போனாங்க. நிறைய கஷ்டப்பட்டுருக்காரு. விஜயகாந்த் துணைத்தலைவரா இருந்தாரு. அவரு சுயநலமற்ற செயல்பாடு உடையவர். கடனை எல்லாம் அடைச்சாரு. ஒரு தலைவன் எப்படி இருக்கணுமோ அப்படி இருந்தாரு. என்றும் சொல்கிறார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top