latest news
சம்பளமே வாங்காம 2 படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா!… காரணம் இதுதானாம்!…
Published on
By
Yuvan shankar Raja: இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. சரத்குமார் நடிப்பில் வெளிவந்த அரவிந்தன் என்கிற படம் மூலம் மிகவும் சிறுவயதிலேயே சினிமாவில் இசையமைப்பாளராக மாறினார். மிகவும் திறமையான இசையமைப்பாளராக பார்க்கப்படுபவர் இவர். செல்வராகவனோடு கூட்டணி போட்டு துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலணி போன்ற படங்களில் அற்புதமான பாடல்களை கொடுத்தார்.
பாலாவின் இயக்கத்தில் உருவான நந்தா படத்தில் இவர் இசையமைத்த ‘முன் பனியா முதல் மழையா’ பாடல் சூப்பர் மெலடி பாடலாக அமைந்தது. அதேபோல், தனது சகோதரர் வெங்கட்பிரபுவுடன் இணைந்து சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, கோட் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
விஜய்க்கு புதிய கீதை படத்திற்கு பின் பல வருடங்கள் கழித்து கோட் படத்திற்கு இசையமைத்தார். ஆனால், இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை பெரிய அளவுக்கு ஈர்க்கவில்லை. பாடல்கள் வெளியானபோது நிறைய நெகட்டிவ் விமர்சனங்களே வந்தது. அதன்பின் பாடலில் சில விஷயங்களை சேர்த்து படத்தை வெளியிட்டார்கள்.
அஜித்துக்கு பில்லா மற்றும் மங்காத்தா ஆகிய படங்களில் யுவன் போட்ட பின்னணி இசை அஜித்தின் ரசிகர்களுக்கு ஆல்டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது. திறமையான இசையமைப்பாளராக இருந்தும் அனிருத் போல இவரால் நம்பர் ஒன் இசையமைப்பாளராக மாறமுடியவில்லை. அதற்கு காரணம் யுவன் ஒரு சோம்பேறி என திரையுலகில் சொல்வார்கள்.
ஒரு பாட்டை போட்டு கொடுக்கவே பல மாதங்கள் எடுத்துக்கொள்வார் என்றும் அவரை பின் தொடர்ந்து பாட்டு வாங்குவதற்குள் படாதபாடு பட வேண்டும் என்பதாலேயே பல இயக்குனர்கள் அவரிடம் செல்வதை தவிர்த்துவிடுகிறார்கள். ஒருபக்கம் 2 படங்களுக்கு சம்பளமே வாங்காமல் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியவில்லை.
வெங்கட்பிரபுவின் சென்னை 28 படத்திற்கு இசையமைத்த யுவன் தனது சகோதரனின் முதல் படம் என்பதால் அந்த படத்திற்கு யுவன் சம்பளம் வாங்கவில்லை. அதேபோல், வெங்கட்பிரபுவின் 2வது படமான சரோஜாவுக்கும் யுவன் சம்பளம் வாங்கவில்லை. அதற்கு காரணம் அரவிந்தன் படத்தில் தன்னை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்த டி.சிவாதான் சரோஜா படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அந்த படத்திற்கும் இலவசமாகவே இசையமைத்து கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் ஏற்கனவே 8 சீசன்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. முதல் 7 சீசனை கமல்ஹாசன்...
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...