×

நிறைகளும் குறைகளும்…. விஜயகாந்த் பார்வையில் பட்ஜெட்  !

நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நிறைகளையும் குறைகளையும் கலந்து கொண்டுள்ளதாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

 

நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நிறைகளையும் குறைகளையும் கலந்து கொண்டுள்ளதாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

2020 -2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல குறைகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் பாஜகவோடு கூட்டணியில் உள்ள தேமுதிக பட்ஜெட்டில் குறைகளும் நிறைகளும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது சம்மந்தமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அறிக்கை

வளர்ச்சி என்று பார்த்தால் வருமான வரி விகிதம் குறைப்பு, வீட்டுக் கடன் சலுகை, விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன், வேளாண்மை உள்கட்டமைப்பு, ஜவுளி தொழில்நுட்பம், ஆகியவற்றில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, விவசாயத்தை இரட்டிப்பாக்குவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது என்று பல வரவேற்கக்கூடிய அம்சங்கள் இருக்கும் பொழுதும், பல குறைகளும் இருக்கின்றது.

இன்றைய பொருளாதாரத்தின் நிலையை அறிந்து தனிநபரின் வருமானத்தை உயர்த்த கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது.பல கோடி பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பை உயர்த்துவதற்கு நல்ல செயல் திட்டங்களை அறிவிக்கவில்லை.

விவசாயத்திற்கு பெரிதும் உதவும் நதிகள் இணைப்புக்காக எந்த ஒரு அறிவிப்பும் இந்த மத்திய பட்ஜெட் திட்டத்தில் இல்லை. எனவே குறைகளும் நிறைந்திருக்கிறது. மத்திய அரசின் இந்த பட்ஜெட் நிறைகளும், குறைகளும் இணைந்த மத்திய அம்சம் கொண்ட மத்திய பட்ஜெட்டாகவே பார்க்கமுடிகிறது

விஜயகாந்த் ,தேமுதிக, பட்ஜெட் நிர்மலா சீதாராமன், vijayakanth, dmdk, budget

Vijayakanth mentioned the flaws in the budget

From around the web

Trending Videos

Tamilnadu News