×

படங்களை மட்டும் ஃபோகஸ் பண்ணுங்க... ஏன் கொதிக்கிறார் ஸ்ருதிஹாசன்?

தான் நடிக்கும் படங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள் மாறாகத் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அல்ல என கொதித்துப் போயிருக்கிறார் ஸ்ருதிஹாசன். 
 

சமீபத்தில் 35வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஸ்ருதி, டெல்லியைச் சேர்ந்த டாட்டூ ஆர்டிஸ்ட் ஷாந்தனு ஹசாரிகா என்பவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வைரலாகின. இதுகுறித்த செய்திகள் வைரலாகின. இதனால், ஸ்ருதி ரொம்பவே அப்செட் என்கிறார்கள். இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் பேசியிருக்கும் ஸ்ருதி, `இனிமேல் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் பேச நான் விரும்பவில்லை. வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்துப் பார்ப்பது மக்களுக்கு எளிதில்லை என்று நினைக்கிறேன். என்னுடைய ஃபோகஸ் என்னுடைய வேலையில் இருக்கிறது. அதேபோல்தான் மற்றவர்களும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விட்டுவிட்டு என்னுடைய வேலையில் ஃபோகஸ் பண்ணுங்கள் என்கிறேன். இதுபற்றி பேச வேறெதுவுமில்லை’’ என்று கொதித்திருக்கிறார். பாகுபலி ஹீரோ பிரபாஸுடன் `சலார்’ படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கும் ஸ்ருதி அதுகுறித்து பேசுகையில்,`இதுவரை பிரபாஸுடன் நடித்ததில்லை. முதல்முறையாக அவருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. மிகவும் ஹார்ட் வொர்க் பண்ணக் கூடியவர் பிரபாஸ். நல்ல மனிதர்’’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News