×

வாய்ப்புக்காக அவர் அந்த இயக்குனருடன் பழகுகிறார் – வாயை விட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட நடிகை!

பாலிவுட் நடிகை பாயல் கோஷ் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பைக் கிளப்பினார்.

 

பாலிவுட் நடிகை பாயல் கோஷ் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பைக் கிளப்பினார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக பயல் கோஷ் என்ற நடிகை குற்றச்சாட்டை வைத்தார். இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஏனென்றால் பாலிவுட் மட்டுமல்லாது உலக சினிமா அரங்கில் கூட மிகவும் மதிக்கப்படும் இயக்குனராக அனுராக் காஷ்யப் இருந்து வருகிறார். சமீபகாலமாக அனுராக் காஷ்யப் மத்திய அரசை விமர்சித்து வருவதால் அவரின் பெயரைக் கெடுக்கவே இவ்வாறாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக அவரது முன்னாள் மனைவி உள்ளிட்ட பல நடிகைகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதில் நடிகை ரிச்சா கட்டாவும் ஒருவர். இதையடுத்து வாய்ப்புக்காக நடிகை ரிச்சா கட்டா போன்றவர்கள் அனுராக் காஷ்யப்புடன் பழகுகிறார்கள் எனக் கூறியது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து தன் மேல் ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்புவதாக ரிச்சா கட்டா பாயல் கோஷ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இப்போது பாயல் கோஷ் தான் பேசியது தவறு என்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டு தன் வார்த்தையை திரும்ப பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். இதை நீதிமன்றம் ஏற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News