அனுராக் காஷ்யப்பின் 'UNKILL_123' படத்தில் வில்லனாக நடிக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்... யார் தெரியுமா?
Updated: Jul 2, 2026, 23:59 IST
ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து 'டார்லிங்' என்ற படத்தை எடுத்து இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாம் ஆண்டன். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமானது.
இதையடுத்து சாம் ஆண்டன் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு, 100, கூர்கா, ட்ரிகர்' ஆகிய தமிழ் படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் 'UNKILL_123'.
இதில் ஹீரோவாக பிரபல பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் நடிக்கிறார். இதை 'வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்' நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார்.
தற்போது, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கொடுத்துள்ள ஒரு பேட்டியில், இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாகவும், இதில் பவர்ஃபுல்லான வில்லன் வேடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

