×

மோசடி.. கொலை மிரட்டல்..நம்பிக்கை துரோகம்.. இப்படி பட்டவரா தர்ஷன்?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் வெற்றி பெற்றவர் என எதிர்பார்க்கப்பட்டவர் தர்ஷன். 
 

அவரும், நடிகை சனம் ஷெட்டியும் காதலித்து வருவதாக கூறப்படது. தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, சனம் ஷெட்டி சமூகவலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வந்தார். மேலும், அவரும் தர்ஷனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், திடீரென தற்போது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மே 2018ம் ஆண்டு எனக்கும், தர்ஷனுக்கு இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் 200 பேர் கலந்து கொண்டனர். 2019 ஜூன் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவருக்காக நான் இதுவரை ரூ.15 லட்சம் செலவு செய்துள்ளேன். பிக்பாஸ் நிகழ்ச்சிகே நான் தான் விண்ணப்பம் அனுப்பினேன். 

திருமணம் நடக்கும் வரை நிச்சயதார்த்தம் நடந்ததை வெளியே கூற வேண்டாம் என அவர் கூறியிருந்ததால் நானும் வெளியே கூறவில்லை. தற்போது, அவர்களின் நண்பர்களின் சொல் பேச்சைக்கேட்டு நான் நடிகை என்பதை காரணம் காட்டி என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். இதுபற்றி கேட்டால் உன்னால் முடிந்ததை செய்து கொள்.. உன்னை எப்படி அமைதியாக்குவது என எனக்கு தெரியும் என மிரட்டுகிறார். கடந்த இரண்டரை வருடங்களாக நாங்கள் காதலித்து வந்தோம். தற்போது எல்லாவற்றையும் மறைக்க பார்க்கிறார்.

நான் நடிக்கும் நடிகர்களுடன் தவறான தொடர்பில் இருப்பதாக கூறி அவமானப்படுத்துகிறார். இலங்கை சென்று அவரின் பெற்றோரையும் சந்தித்தேன். அவர்களும் எனக்கு உதவ முன்வரவில்லை. இதன் காரணமாக என் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

 எனவேதான், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். அவர் என்னை காதலித்ததையும், நிச்சயதார்த்தம் நடந்ததையும் அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் மீது மோசடி, நம்பிக்கை துரோகம், கொலை மிரட்டல், பெண்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் புகார் கொடுத்துள்ளேன். அடுத்து மகளிர் அமைப்புகளையும் அணுகவுள்ளேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News