×

திருமணம் செய்துகொள்வதாய் ஏமாற்றி பலமுறை உல்லாசம் - 10 வருட சிறை மற்றும் அபராதம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ்.  இவர் ஆண்டிபட்டி பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது தனக்கு திருமணமானதை மறைத்து, அங்கு வேலை செய்த பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பல முறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 
 

ஒருகட்டத்தில் அவர் திருமணமானவர் என்பது அப்பெண்ணுக்கு தெரியவர ஆண்டிப்பட்டி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியனது.

பொன்ராஜுக்கு 10 வருட சிறைத்தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபாரதமும் விதிக்கப்பட்டது. அதில் 50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தையின் படிப்பு செலவிற்காக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த தொகையை பொன்ராஜ் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறையில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News