×

சோசியல் டிஸ்டென்சில் மாற்றப்படும் தியேட்டர்கள்... டிரெண்டாகும் ஓமா கான்செப்ட்!

கொரோனா சூழலால் இந்திய சினிமாத் துறை மிகப்பெரிய அடி வாங்கியிருக்கிறது. பல சின்ன தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. 
 

கொரோனா ஊரடங்கால் மக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டு, தியேட்டர்களும் கடந்த மார்ச்சில் மூடப்பட்டன. அதன்பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பரில் இருந்து தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன. இருந்தாலும், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற விதியால் பல சின்ன தியேட்டர்கள் போதிய வருமானம் இல்லாமல் மூடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டன. 


பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மட்டுமே சர்வைவ் பண்ண முடியும் என்ற நிலையில் இருந்தன. மாஸ்டர் படம் சின்ன நம்பிக்கையை அளித்திருக்கிறது. சமீபத்தில்தான் 100 சதவீத பார்வையாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. கொரோனா பிரச்சனை முழுவதுமாக ஓயாத நிலையில், சமூக இடைவெளி என்ற விதி அவசியாமாகிறது. 


இந்தசூழலில் தனித்தனி பால்கனி, சோசியல் டிஸ்டன்சிங்குடன் இருக்கைகள் என பிரெஞ்சு கம்பெனி ஒன்றின் தியேட்டர் வடிவமைப்பு கான்செப்ட் வைரலாகி வருகிறது. இந்த கான்செப்டை வடிவமைத்திருக்கும் பிரான்ஸின் ஓமா என்ற நிறுவன அதிகாரி நிகோலஸ் சிகான் கூறுகையில், `சமூக இடைவெளியுடன் தியேட்டர்களில் இருக்கை அமைக்கப்படுவதுடன், தியேட்டர் உரிமையாளர்களுக்குப் போதிய வருமானம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் `ஓமா சினிமா வெர்ட்டிகல் கான்செப்ட்டை (The Oma Cinema vertical concept) உருவாக்கியிருக்கிறோம். பாரிஸில் முதல்முறையாக இது செயல்படுத்தப்பட இருக்கிறது. உலக அளவில் பெரிய சினிமா ரசிகர்களையும், சினிமா மார்க்கெட்டையும் கொண்டிருக்கும் இந்தியாவில் இதை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது பற்றி ஆலோசித்து வருகிறோம். பாரிஸைத் தொடர்ந்து இந்தியாவிலும் இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும்’’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News