×

15 வயது முதல் 72 வயதுவரை… 8 வயது சிறுமியிடம் அத்திமீறிய 8 பேர்!

கன்னியாகுமரியில் வறுமையில் சிறுமி ஒருவரிடம் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 8 பேர் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரியில் வறுமையில் சிறுமி ஒருவரிடம் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 8 பேர் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி தேங்காய் பட்டணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த தொழிலாளியின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் குழந்தையை சரியாக பராமரிக்க முடியவில்லை. லாக்டவுன் காரணமாக சிறுமியின் தந்தைக்கு எந்த வேலையும் இல்லாததால் குடும்ப சூழ்நிலை மோசமாகியுள்ளது. இதனால் அந்த சிறுமி சிறுமி அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று உதவி கேட்டுள்ளார்.

அவருக்கு உதவி செய்த சிலர் அதையே சாதகமாக எடுத்துக்கொண்டு அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டுள்ளனர். இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் அந்த 8 பேரில் நான்கு பேர் 50 வயதைக் கடந்த முதியவர்கள் மற்றும் 2 பேர் 15 வயதுக்கு உட்பட்ட மைனர் சிறுவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை தந்தையிடம் சொல்ல அவர் போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட 8 பேரும்  போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News