×

என்ன டாஸ்க் கொடுக்கிறீங்க.. செத்த பயலுவலா.. நாரப்பயலுவலா..!!

தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் சற்று தாமதமாக தொடங்கவிருக்கிறது.

 
g.p.muthu

தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் சற்று தாமதமாக தொடங்கவிருக்கிறது.

இதில் கலந்துகொள்ளும் நடிகர் நடிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களைப்பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து கனி, சுனிதா, கவர்ச்சி நடிகை சகிலாவின் மகள் மீலா, பாபா பாஸ்கர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வந்தது.

இட்டவர்கள் மட்டுமின்றி விஜய் சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த வசுந்தரா, சார்பட்டா ஜான் விஜய் ஆகியோரும் கலந்துகொள்ளவிருப்பதாக முன்னதாக தகவல்கள் கசிந்தது. ஆனால், இதைப்பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

bigg boss 5
bigg boss 5

இந்நிலையில் டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து பிக்பாஸ் செட்டில் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் அவர் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்த படம்தான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

இந்த போட்டோவைப் பார்த்த காமெடி நடிகர் சதீஷ், பிக்பாஸ் வீட்டில் கடிதங்களை  மறந்துவிடாதீர்கள். என்னடா டாஸ்க் கொடுக்குறீங்க.. செத்த பயலுவலா.. நாரப்பயலுவலா.. என காமெடியாக ட்வீட் செய்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் படத்தில கூட இந்த அளவிற்கு காமெடி பண்ணவில்லையே என கலாய்த்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர்தான் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 5க்கான புதிய லோகோவை அறிமுகம் செய்துவைத்தார். விரைவில் இந்நிகழ்ச்சி


தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News