Connect with us
gabrilla

Cinema News

கடைசியில் உன் நிலமை இப்படி ஆகிப்போச்சே… கேபியை பார்த்து கைதட்டி சிரிக்கும் நெட்டிசன்ஸ்!

சீரியல் நடிகையாக களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம் கேபிரில்லா!

ஸ்ருதி ஹாசன் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் குழந்தை நட்சத்திரமாகி ஸ்ருதிக்கு தங்கையாக நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் கேபிரில்லா சார்ல்டன். இவர் ஜோடி நம்பர் ஒன் 6 நிகழ்ச்சியில் நடனமாடி வெற்றியாளரானார்.

அதையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டார். தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மேலும் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: ஈரமான ரோஜோவே சீசன் 2 மூலம் பிக்பாஸ் நடிகையை களமிறக்கும் விஜய் டிவி…..

நிறைய படங்களில் நடித்து பெரிய நடிகர்களுக்கு ஹீரோயின் ஆவார் என எதிர்பார்த்தால் அம்மணி சீரியலுக்கு ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். ஆம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மெகா ஹிட் அடித்த ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பக்கத்தில் நடிக்க உள்ளாராம். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். உனக்கு போயி இப்படியா? என கலாய்க்கும் நெட்டிசன்ஸ் சரி வாய்ப்பை பயன்படுத்திக்கோ என ஆறுதல் கூறி வருகின்றனர்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top