×

குட்டி நயன்தாராவாக மாறிய கேப்ரியல்லா... தாவணி பாவாடையில் செம க்யூட்.....

 
gabriella

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் அறிமுகமானவர் கேப்ரியல்லா. அப்போது சிறுமியாக இருந்தார். அதன்பின் தனுஷ் - ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாநாயகிகளின் தங்கை வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 

gabriella

அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என ரசிகர்களை கவர்ந்தார். 100 நாள் வரை தாக்குபிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவர் எடுத்த முடிவு தவறானது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

gabriella

அதன்பின், விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் பகிரும் புகைப்படங்கள் அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்.

gabriella

இந்நிலையில், நல்ல பிள்ளையாக தாவணி பாவடை அணிந்து அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள் அவரை குட்டி ‘நயன்தாரா’ என கொஞ்சி வருகின்றனர்.

gabriella

From around the web

Trending Videos

Tamilnadu News