×

மிஸ் பண்ண விஜய் பட வாய்ப்பு.. கதறும் கேப்ரியலா... அடடா இந்த படமா?

கேப்ரியலாவை நாம் அனைவருக்கும் தெரியும், ஆனால் இது வரை நமக்கு தெரியாத ரகசியம் ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.

 
Gabriella-Charlton

கேப்ரியலாவை நாம் அனைவருக்கும் தெரியும், ஆனால் இது வரை நமக்கு தெரியாத ரகசியம் ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் நிறைய புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்றன. அப்படி புதிதாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சிகள்.

இந்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பரீட்சயமானவரானார் கேப்ரியலா. நடன நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்குபெற்று வந்த கேப்ரியலா 7 சி என்கிற பள்ளி சீரியலிலும் நடித்திருந்தார்.

அதன்பிறகு படங்களில் வாய்ப்பு கிடைக்க சில படங்கள் மட்டுமே நடித்தார். அண்மையில் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவை பெற்றார்.

கேப்ரியலா இதுவரையிலான தனது பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் தான் இதுவரை விஜய்யின் பிகில் மற்றும் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்ததாக கூறியுள்ளார். ஆனால் எதனால் இப்படங்களில் நடிக்கவில்லை என்று கூற மறுத்துவிட்டார்.

இப்படி ஒரு வாய்ப்பை யாராவது தவறவிடுவார்களா என அனைவரும் புலம்பிவருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News