×

கேபி கொஞ்சம் வெயிட் பண்ணுமா.. அதுக்குள்ள ஏன் இப்படி போஸ் கொடுக்குற?...

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார் கேப்ரியல்லா. பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடு எல்லோரையும் கவர்ந்தது. யாருடனும் பெரிதாக சண்டை போடாமல், வெறுப்பை சம்பாதிக்காமல் விளையாடிய விதம் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. ஆனால், திடீரென யாரும் எதிர்பார்த்திராதபடி ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘கேபி கொஞ்சம் வெயிட் பண்ணுமா.. அதுக்குள்ள ஏன் இப்படி போஸ் கொடுக்குற?...’ என பதிவிட்டு வருகின்றனர்.
 

A post shared by Gaby (@gabriellacharlton_)

From around the web

Trending Videos

Tamilnadu News