கேம் சேஞ்சர் படம் விஜயகாந்த் படத்தின் காப்பியா?!. எல்லாத்துக்கும் கேப்டன்தானா!...

by Murugan |   ( Updated:2025-01-08 04:56:58  )
vijayakanth
X

Game Changer: சினிமாவில் ஒரு கதையை போலவே மற்றொரு படம் உருவாவது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. சூப்பர் ஹிட் அடித்த ஒரு படத்தை சில வருடங்கள் கழித்து அந்த கதையை கொஞ்சம் மாற்றி வேறு மாதிரி எடுப்பார்கள். சில இயக்குனர்கள் அந்த கதையை கொஞ்சம் உல்டா செய்து எடுப்பார்கள்.

இதற்கு பெரிய உதாரணம் இயக்குனர் அட்லீ. மணிரத்னத்தின் மௌன ராகம் படத்தை உல்டா செய்து ராஜா ராணி எடுத்தார். அது ஹிட் அடிக்கவும் தொடர்ந்து ஹிட் அடித்த பழைய படங்களை உல்டா செய்ய துவங்கினார். விஜயகாந்தின் சத்ரியன் படத்தை தெறி படமாகவும், கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தை மெர்சலாகவும் எடுத்தார்.


ஷாருக்கானின் சக்தே இண்டியா மற்றும் சில ஆங்கில படங்களில் வந்த காட்சிகளை சுட்டு பிகில் எடுத்தார். இதை அட்லி மட்டுமல்ல. எல்லா மொழிகளிலும் பல இயக்குனர்கள் அதை செய்வார்கள். சில படங்களை இது அந்த படத்தின் காப்பி என்பதை கண்டுபிடித்துவிடலாம். சிலவற்றை ரசிகர்களாலேயே கண்டுபிடிக்க முடியாது. இரண்டு மூன்று படங்களின் கதையை கலந்து எடுத்துவிடுவார்கள்.

விஜயகாந்த் படங்களை தொடந்து இயக்குனர்கள் காப்பி அடிப்பார்கள். ஏனெனில், அவரின் படங்களில் பக்கா ஹீரோயிசம் இருக்கும். விஜயை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய கோட் படம் கூட விஜயகாந்தின் ராஜதுரை படம் என சொல்லப்பட்டது. ஆனால், ‘அந்த படத்தை நான் பார்த்த பின்னர்தான் அது எனக்கே தெரிந்தது’ என வெங்கட்பிரபு சொல்லியிருந்தார்.


தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து 500 கோடி செலவில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் கதை கூட விஜயகாந்தின் தென்னவன் பட கதை போலவே இருப்பது தெரியவந்துள்ளது. தென்னவன் படத்தில் ஐஏஸ் படித்த தேர்தல் அதிகாரியான விஜயகாந்துக்கும், முதலமைச்சர் நாசருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதை.

கேம் சேஞ்சர் படத்தில் ஐஏஎஸ் அதிகாரி ராம்சரணுக்கும், முதல்வர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதை. தென்னவன் படத்தில் பிளாஷ்பேக் இருக்காது. கேம் சேஞ்சர் படத்தில் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். இந்த கதையை ஷங்கர் தனது ஸ்டைலில் இயக்கியிருக்கிறார்.

இந்த கதையை ஷங்கருக்கு சொன்னது இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ். மொத்தத்தில் பல இயக்குனர்கள் கேப்டன் கதையை சுட்டு பட்டி டிங்கரிங் செய்து படமெடுத்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

Next Story