அடுத்த பலி ஆடு ராம்சரணா? அல்லு அர்ஜூன் நிலைமைய பாத்துமா இப்படி? திருந்தவே மாட்டீங்க

by Rohini |
ramcharan
X

ramcharan

புஷ்பா விவகாரம்:

சினிமா மோகம் ஒரு மனிதனை எந்த அளவு முட்டாள் ஆக்குகிறது என்பதற்கு உதாரணமாகத்தான் இந்த ஒரு சம்பவம். சமீபத்தில் தான் புஷ்பா 2 படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வர ஏற்கனவே அவருடைய படத்தை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டு இருந்த வேளையில் அல்லு அர்ஜுன் வருவதை அறிந்ததும் அந்த கூட்டம் அப்படியே இவரை பார்ப்பதற்கு திரும்பியது. அப்போது அங்கு இருந்த ரசிகர்கள் அனைவரும் மடமடவென ஓட அந்தக் கூட்டத்தில் ஒரு பெண் மற்றும் அந்த பெண்ணின் மகன் சிக்கி மூச்சு திணறி அந்தப் பெண் அந்த இடத்திலேயே இறந்தார்.

அந்தப் பெண்ணின் மகன் மூளைச்சாவு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இது சம்பந்தமாக அல்லு அர்ஜுனை கைது செய்து ஒரு நாள் சிறையில் வைத்து விடுவித்தது. இந்த ஒரு சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெலுங்கு நடிகர்கள் மீது பெரும் கோபத்தில் இருந்தார். அதற்கு காரணம் ஒரு நாள் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அல்லு அர்ஜுனை பார்க்க ஒட்டுமொத்த தெலுங்கு நடிகர்களும் அவர் வீட்டில் கூடியிருந்தனர்.

250 அடி உயரமா?

ஆனால் பாதிக்கப்பட்ட சிறுவனை பார்க்க யாராவது மருத்துவமனைக்கு சென்றார்களா. அதுமட்டுமல்ல நான் என்ன தவறு செய்தேன்? இந்த அரசு என்ன தவறு செய்தது ?எங்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பை கக்குகிறீர்கள் என்று பெரும் ஆவேசத்துடன் கூறியிருந்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. இந்த அலையே இன்னும் ஓயாமல் இருக்க அடுத்த அலை கிளம்ப இருக்கிறது. ராம்சரண் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர்.

இந்த படம் பொங்கல் ரிலீஸ் ஆக ஜனவரி 10ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த படத்தின் மீது ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்க நாளை விஜயவாடாவில் பெரிய அளவில் படத்தை ப்ரொமோட் செய்ய இருக்கிறார்களாம். இதில் ராம் சரணுக்கு 250 அடி உயரத்தில் கட் அவுட் வைக்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறதாம். இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு உயரத்தில் கட்அவுட் வைத்ததே இல்லை.

முதல் நடிகர் ராம்சரண்:

இதற்கு முன் பிரபாஸுக்கு மட்டும்தான் 230 அடியில் கட்அவுட் வைத்திருந்தனர். இப்போது அவரை பின்னுக்கு தள்ளி முன்னணியில் இருக்கிறார் ராம்சரண். அது மட்டுமல்ல நாளை கட்அவுட்டுக்கு மேலே ஹெலிகாப்டரில் இருந்து அவருக்கு மாலை தூவி வரவேற்கவும் தயாராக இருக்கிறார்களாம். கிட்டத்தட்ட இந்த 250 அடி உயர கட்அவுட்டுக்கு ஆன மொத்த செலவு 9 லட்சம் என சொல்லப்படுகிறது .இதையெல்லாம் பார்க்கும் பொழுது இந்த உலகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது என தெரியவில்லை.


எத்தனையோ மக்கள் பட்டினியாலும் தங்க இடமில்லாமலும் தவித்து வருகின்றனர். ஒரு நாள் கூத்துக்கு ஒன்பது லட்சம் செலவு செய்யும் இந்த மாதிரி மனிதர்கள் இருக்கிறவரை சக மனிதர்கள் உயர முடியாது என்பதற்கு ஒரு உதாரணம் தான் இந்த ஒரு சம்பவம். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த அளவு உயரத்தில் கட்அவுட் வைத்து தக்க பாதுகாப்பு இல்லை என்றால் நாளை என்ன நடக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஒழுங்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அந்த விழா சிறப்புடன் நடந்தால் அனைவருக்குமே நல்லது. திடீரென கட்அவுட் விழுந்து அதில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் பின் விளைவுகள் எந்த மாதிரி இருக்கும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

Next Story