பல கோடியில் படம் எடுத்தாலும் இவர்கிட்ட வாலாட்ட முடியாது.. கேம் சேஞ்சருக்கு வந்த நெருக்கடி
விடாமுயற்சி:விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரேஸிலிருந்து விடுபட அடுத்தடுத்து 10 படங்கள் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. இதில் ஆரம்பத்தில் துண்டை போட்டு இடம் பிடித்த திரைப்படம் கேம் சேஞ்சர். படத்தின் பாடல்களுக்கு மட்டும் 75 கோடி செலவழித்து இருப்பதாக கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு இசை வெளியீட்டு விழாவில் மிகவும் பெருமையாக பேசியிருந்தார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது இந்தியன் 2 படத்தை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இதைப் பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கேம் சேஞ்சர் படத்தை பற்றி அவருடைய கருத்துக்களை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
புதுசா ஒன்னுமில்லை: மேலும் கேம் சேஞ்சர் படத்தை பற்றி நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. ட்ரெய்லர் வெளியாகி இன்னும் அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆர்வம் இருந்ததைப் போல் தெரியவில்லை. பிரம்மாண்டம் என்பதை நம்பி மட்டும்தான் அந்த படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது முதல்வன் 2, இந்தியன், ஜென்டில்மேன் 2 போன்ற படங்களின் தாக்கத்தை தான் ஏற்படுத்தியது.
பழைய வசனம்:முக்கியமாக விஜயகாந்த் நடித்த தமிழ்ச்செல்வன் என்ற திரைப்படம் அந்தப் படத்தை தழுவி எடுத்ததைப் போல் தான் கேம் சேஞ்சர் படத்தின் டிரைலர் நமக்கு உணர்த்தியது. இந்திய அளவில் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும் ஐபிஎஸுக்கும் இடையேயான சண்டை மோதல் என எல்லா படங்களிலும் வந்திருக்கிறது. அது ஏறக்குறைய தமிழ்ச்செல்வன் படத்தில் தான் காட்டப்பட்டது. அதனுடைய சாயலை போல தான் கேம் சேஞ்சர் திரைப்படமும் இருப்பதாக தெரிகிறது. அதில் ஒரு வசனம் நீங்கள் ஐந்து வருடம் தான் ஆட்சியில் இருக்க முடியும். நான் ஆயுள் வரை இருக்க முடியும் என்ற ஒரு வசனம்.
உரசலா?:இது பழைய காலத்தில் இருந்து எல்லா படங்களிலும் பேசப்பட்டு வரும் வசனம். ஷங்கருக்கு என்னதான் ஆச்சு என தெரியவில்லை. இதே மாதிரி தெலுங்கில் நிறைய படங்கள் வந்து விட்டன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் படத்தில் அமைந்த பாடல்களுக்கு 75 கோடி என்பது சாதாரண விஷயம் இல்லை .இந்த 75 கோடியில் 50 இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து அவர்களை வாழ வைத்திருக்கலாம். தெலுங்கிலும் நிறைய படங்களை எடுத்திருக்கலாம். இதையெல்லாம் தாண்டி அல்லு அர்ஜுன் குடும்பத்திற்கும் ராம்சரண் குடும்பத்திற்கும் இடையில் ஏதோ ஒரு சிறிய கருத்து வேறுபாடு இருப்பதைப் போல தெரிகிறது .
யாரும் செய்யாத சாதனை:புஷ்பா படத்தின் பிரமோஷனை பாட்னாவில் வைத்திருந்தார்கள். அதற்கு காரணம் புஷ்பா படத்தின் முதல் பாகம் வட இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதனால் தான் அதன் இரண்டாம் பாகத்தின் பட ப்ரோமோஷன் பாட்னாவில் நடைபெற்றது. ஆனால் ராம்சரனுக்கும் லக்னோவுக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை. லக்னோவில் ப்ரோமோஷனல் வைத்திருந்தார்கள். இதிலிருந்து அவர்கள் இரு தரப்புக்கும் ஏதோ ஒரு சிறு உரசல் போய்க்கொண்டிருப்பதாக தெரிகிறது .இன்னொரு பக்கம் என்டி ராமராவ் கூட பெற முடியாத தேசிய விருதை அல்லு அர்ஜுன் பெற்றிருப்பது தெலுங்கு தேசத்தில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி 64 வயதிலும் ஒருத்தர் மாஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் படமும் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கின்றது. அதுவும் நடிகை ஊர்வசி ரவுத்தாலாவை அடி அடி என துவைத்து கொண்டிருக்கிறார். யாரு நம்ம பாலையா தான். அவர் நடித்த டாக்கு மகாராஜா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதுவும் அந்தப் பாடல் இந்த வயதிலும் இந்த குத்து குத்துகிறாரே என்ற அளவுக்கு அந்தப் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் .அதனால் கேம் சேஞ்சர் படத்திற்கு இவருடைய படமும் ஒரு நெருக்கடியாக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது என செய்யாறு பாலு இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்.