Connect with us

Cinema News

விளையாட்டாய்….. தலைப்பு வைத்த தமிழ்சினிமாக்களை கொஞ்சம் திரும்பிப் பாருங்க…!

தமிழ்சினிமாவில் தலைப்புகள் விதவிதமாக வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் அனைத்திலும் உற்று நோக்கினால் ஒரே ரக ஒற்றுமை காணப்படுகின்றன. உதாரணத்திற்கு திருப்பதி, சிவகாசி, திருத்தணி, திருவண்ணாமலை, பம்பாய் என ஊர் பெயர்களைக் கொண்ட படங்கள் ஏராளமாக உள்ளன.

அதே போல் மிரட்டலாக தலைப்பு வைத்த படங்களையும் ஏராளமாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அருவாவேலு, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, குத்து, நெத்தி அடி, கத்தி என நம்மை மிரட்டுகின்றன படத்தின் தலைப்புகள். அதே ரகங்களில் இப்போது நாம் காண இருப்பது விளையாட்டுகளின் பெயர்களைக் கொண்ட படங்கள். என்னென்ன வந்துள்ளன என பார்ப்போமா…

ஆடுபுலி ஆட்டம்

aadu puli aattam kamal and rajni

1977ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். விஜயபாஸ்கர் இசை அமைத்துள்ளார். கமல், ரஜினி என இரு ஜாம்பவான்கள் இணைந்து நடித்த படம்.

ஸ்ரீபிரியா, மேஜர் சுந்தரராஜன், சங்கீதா, தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். உறவோ புதுமை, வானுக்கு தந்தை எவனோ, மணமே சோலையா, பூங்குயில் பாடுது ஆகிய பாடல்கள் உள்ளன.

கில்லி

2001ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் தரணி. இளையதளபதி விஜய் நடித்த படங்களில் மெகா ஹிட்டான படம் இது. த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகரின் இசையில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின.

கபடி கபடி, அர்ச்சுனரு வில்லு, அப்படி போடு, சூர தேங்கா, கொக்கர கொக்கரக்கோ உள்பட பல பாடல்கள் உள்ளன. இந்தப்படத்தில் கபடி தான் விளையாட்டு. படம் முழுவதும் இந்த விளையாட்டை தான் மையமாகக் கொண்டு எடுத்து இருப்பார்கள்.

ரம்மி

rummy movie

2014ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் பாலகிருஷ்ணன். விஜய் சேதுபதி, காயத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், செண்ட்ராயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சக்கை போடு போட்டன. கூட மேல கூட வச்சி, அடியே என்ன ராகம், ஒரு நொடி, எதுக்காக என்ன நீயும் ஆகிய பாடல்கள் உள்ளன.

டிக்கிலோனா

2021ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கார்த்திக் யோகி. சந்தானம், அனகா, ஷிரின், யோகிபாபு, ஹர்பஜன் சிங், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சைக்கிள் வீல போல, மஞ்ச கலரு குருவி, பேர் வைச்சாலும் வைக்காம, ஏதும் சொல்லாதே உள்பட பல பாடல்கள் உள்ளன.

கத்திச்சண்டை

kathi sandai

2016ல் சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு, மதன்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். நான் கொஞ்சம் கருப்பு, கத்தி சண்டை, இதயம் இதயம். எல்லாமே காசு ஆகிய பாடல்கள் உள்ளன.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top