×

மகளின் பிறந்தநாளில் சத்தியம் செய்து சபதம் ஏற்ற கணேஷ்!

தமிழ் சினிமாவில் அபியும் நானும், ஆச்சாரம், இவன் வேறமாதிரி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கணேஷ் வெங்கட்ராமன் கடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பெரும் பிரபலமானவர்.

 

இவர் கடந்த 2015ம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு சமைரா என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது.

இதற்க்கிடையில் செல்ல மகளுடன்  நேரத்தை செலவிட்டு கணேஷ் - நிஷா அவ்வப்போது வீடியோ புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தற்ப்போது மகள் சமைராவின் முதல் பிறந்தநாளை  கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு  "இந்த பிறந்தநாள் முதல் தன் மகள் சிறகடித்து பறக்க உந்தித்தள்ளும் காற்றாக இருக்க விரும்புகிறேன்" என  உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News