ஒருத்தரும் இல்லாம ஓடி போயிட்டீங்க!.. அநாதையா போயிட்டாரு!.. கோபப்பட்ட கங்கை அமரன்!

 
bharathi raja

16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் பாரதிராஜா. கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை திரைப்படங்களில் பிரதிபலித்தார். நாடகத்தன்மை கொண்ட திரைப்படங்கள் உருவாக்கி வந்த காலத்தில் இயல்பான திரைப்படங்களை இயக்கினார்.

பல புதுமுக நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரின் மகன் மனோஜ் மாரடைப்பில் மரணம் அடைந்தது பாரதிராஜாவை மனதளவில் மிகவும் பாதித்தது. அதனால் தனிமையில் வாடினார். ஏனெனில் அவரின் மனைவி அவருடன் இல்லை என சொல்லப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பல வருடங்களாக பிரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது..

சென்னையில் உள்ள நீலாங்கரை வீட்டில் பாரதிராஜா தனித்து வாழ்ந்து வந்த போது அவ்வப்போது இளையராஜாவின் சகோதரரும் பாடலாசிரியர் மற்றும் இயக்குனருமான கங்கை அமரன் அடிக்கடி போய் சந்தித்து பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்லி வந்தார். அதோடு, மறதி இழந்திருந்த பாரதிராஜாவுக்கு பல பழைய சம்பவங்களை சொல்லி அவரின் நினைவை மீட்க முயற்சி செய்தார்.

இந்நிலையில்தான், இன்று அதிகாலை 2 மணி அளவில் பாரதிராஜா சென்னை உள்ள தனது வீட்டில் காலமானார். இதனையடுத்து ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். கணவரின் மரண செய்தி கேட்டு பாரதிராஜாவின் மனைவி அங்கே வந்து அழுத போது ‘எல்லாரும் விட்டுட்டு போயிட்டீங்க.. அனாதையா செத்து கிடந்தாரு’ என கங்கை அமரன் கோபமாக கத்தினார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

From Around the web