வழக்கம் போல பெரியவரு உலறிட்டாரு! ‘கோட்’ படத்தின் முக்கியமான சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட கங்கை அமரன்

 
வழக்கம் போல பெரியவரு உலறிட்டாரு!  ‘கோட்’ படத்தின் முக்கியமான சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட கங்கை அமரன்
GOAT Movie: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் கோட். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா நடிக்கிருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து லைலா, பிரபுதேவா, பிரசாந்த் , அஜ்மல் போன்ற பல நடிகர்களும் நடித்து வருகிறார்கள். படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைக்கிறார். படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பே இருந்து வருகிறது. அதுவும் அஜித்தின் 50வது படமான மங்காத்தா என்ற ஆக்‌ஷன் ப்ளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவிடம் அதே மாதிரியான டெம்ப்ளேட்டைத்தான் விஜய் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இருப்பதால் வாரிசு படம் மாதிரி வராமல் இருந்தால் சரி என புலம்பி வருகிறார்கள். இந்த நிலையில் கங்கை அமரன் சமீபகாலமாக தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இதையும் படிங்க:  ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து திடீரென விலகிய நடிகர்! உள்ளே எண்ட்ரி ஆகும் ரஜினி வெறியன்.. யார் தெரியுமா? அதில் கோட் படத்தை பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்தார். அதாவது கோட் படத்தில் கங்கை அமரன் ஒரு பாடல் எழுதியிருக்கிறாராம். அது கோட் படத்தின் முதல் சிங்கிளாக வெளிவருமா என்று தொகுப்பாளர் கேட்க எல்லாவற்றையும் சொன்னால் எப்படி? பொறுத்திருந்து பாருங்கள். பொறுமையாக இருங்கள் என்று கூறி வாயடைத்தார். அதுமட்டுமில்லாமல் தினமும் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து படம் எப்படி வந்திருக்கிறது என கங்கை அமரன் கேட்பாராம். நல்லா வந்திருக்குது டேடி என்று வெங்கட் பிரபு சொன்னாலும் விஜயும் பேசுவாராம் . அவரும் கங்கை அமரனிடம் ‘வெங்கட் பிரபு போட்டு பிழிஞ்சி எடுக்கிறான். படம் நல்லா வந்திருக்குது அப்பா’ என கூறுவாராம். இதையும் படிங்க:  அடுத்த ரஜினி இவர் தானாம்… ஆட்டோகிராப் வாங்க வந்தவரை ஹீரோவாக்கிய இயக்குனர் இமயம்!… மேலும் இந்த வருடம் கண்டிப்பாக பிரேம்ஜியின் திருமணம் நடைபெறும் என்றும் அவன் திருமணம் தான் பெரும் புரட்சியையே ஏற்படுத்தப் போகிறது என்றும் மலராத செடி கூட மலரும் என்றும் தன் மகன் திருமணத்தை பற்றி அவரே கலாய்த்துக் கூறினார். மேலும் சங்கிகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த கங்கை அமரன் ‘ நான் ஒரு சங்கி. இளையராஜா பெரிய சங்கி. ஏஆர் ரஹ்மானும் ஒரு சங்கிதான்’ என சங்கீதத்தில் இருப்பதால் சங்கி என அர்த்தத்தில் இப்படி கூறினார்.

From Around the web