பாரதிராஜா உடலை பார்த்து கதறியழுத மனைவி.. கங்கை அமரன் கேட்டார் பாருங்க ஒரு கேள்வி.. ஷாக்
தமிழ் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா தனது 84வது வயதில் காலமானது திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராமத்து வாழ்க்கையை இயல்பாக திரையில் பதிவு செய்து தமிழ் சினிமாவுக்கு புதிய பாதையை உருவாக்கிய பாரதிராஜாவின் மறைவு, தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் நேரில் வந்து மரியாதை செலுத்தினர்.
கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் பாரதிராஜா திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பாரதிராஜாவை மனரீதியாக மிகவும் பாதித்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. அதன்பிறகு உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், சமீப காலமாக வீட்டிலேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரது மனைவி துயரத்துடன் உடலருகே வந்தபோது, இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் ”கடைசியில் யாருமே இல்லாமல் ஓடி போயிட்டிங்கல்ல, அனாதையா போயிருக்காரு” என உணர்ச்சிவசப்பட்டு பேசிய வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த நேரத்தில் அங்கிருந்த ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் அவரை அமைதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பாரதிராஜாவின் மறைவு குறித்து எழுந்துள்ள இந்த விவாதங்களைத் தாண்டி, தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும், அவர் உருவாக்கிய எண்ணற்ற படைப்புகளும் தான் தற்போது ரசிகர்களின் நினைவில் முக்கிய இடம் பிடித்துள்ளன. இயக்குநர் இமயமாக போற்றப்பட்ட பாரதிராஜா, தனது படைப்புகள் மூலமாக என்றும் தமிழ் மக்களின் மனதில் வாழ்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
