அண்ணன் குடிப்பாரு.. நான் காவல்!.. அதோடு குடிக்கிறத விட்டுட்டேன்!.. கங்கை அமரன் ஓப்பன்!...
Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் தமிழ் சினிமாவில் களமிறங்கி தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறியவர் இளையராஜா. 80களில் இவர் கொடிதான் கோலிவுட்டில் பறந்தது. 80களில் வெளியான 90 சதவீத படங்களுக்கு இளையராஜாதான் இசை. ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, மோகன், ராமராஜன் போன்ற பல நடிகர்கள் தங்களின் படங்கள் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களையும், பின்னணி இசையையும்தான் நம்பியிருந்தனர்.
சினிமாவில் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்கிற ஆர்வத்தில் அண்ணன் இளையராஜாவோடு சென்னை வந்தவர்தான் அவரின் தம்பி கங்கை அமரன். இளையராஜா பிசியான இசையமைப்பாளராக மாறியதும் அண்ணனுக்கு உதவியாக அவருடன் இருந்தார். சில படங்களுக்கு இசையும் அமைத்தார். மேலும், இயக்குனராக மாறி சில படங்களையும் இயக்கினார். அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்தான். இப்படி பாடலாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர் கங்கை அமரன்.
ஒருபக்கம், அடிக்கடி ஊடகங்களில் எதையாவது பேசி சர்ச்சையிலும் சிக்குவார். இளையராஜாவை கடுமையாக விமர்சிது, திட்டி பேட்டி கொடுப்பார். ஆனால் இளையராஜாவை யாராவது விமர்சனம் செய்தால் உடனே ‘தம்பி நான் இருக்கிறேன்’ என அவர்களை மிரட்டுவது போல பேட்டி கொடுப்பார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் மதுப்பழக்கம் பற்றி பேசியபோது ‘அப்போதெல்லாம் அண்ணனும் (இளையராஜா), பாஸ்கரும் இணைந்து குடிப்பார்கள். நான் அவர்களுக்கு காவல் இருப்பேன். எனக்கும் குடிப்பழக்கம் இருந்தது. ஆனால் ஒருமுறை குடித்துவிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ரிக்கார்டிங் தியேட்டருக்கு செல்லவில்லை. 2 நாள் வருமானம் போனது. அப்போதே முடிவெடுத்து மது பழக்கத்தை விட்டு விட்டேன்’ என ஓப்பனாக பேசியிருக்கிறார்.
ரஜினி ஒரு விழாவில் பேசிய போது ‘அரை பீர் குடிச்சிட்டு இளையராஜா போட்ட ஆட்டம் இருக்கே’ என ஜாலியாக பேசியிருந்தார். அதை மேடையிலேயே இளையராஜாவும் ஒப்புக்கொண்டார். இதை பார்க்கும்போது இளையராஜா, கங்கை அமரன் ஆகியோருக்கு தொடக்கத்தில் மதுப் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் அந்த பழக்கத்தை விட்டு விட்டார்கள் என்பது புரிகிறது.
