Connect with us

Cinema News

கமலை நாங்க ஸ்டுடியோக்குள்ளயே விட மாட்டோம்.. – ரொம்ப ஸ்டிரிக்டான ஆளு போல கங்கை அமரன்..!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பல திறன்களை கொண்டவர் கங்கை அமரன். ஆரம்பக்காலங்களில் இவர் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்றே ஆசைப்பட்டார். எனவே இதற்காக தொடர்ந்து கண்ணதாசனிடம் வாய்ப்பு கேட்டு வந்தார்.

பிறகு தமிழ் சினிமாவிற்கு அவரது அண்ணன் இளையராஜா மூலமாக வந்த கங்கை அமரன் துவக்கத்தில் பாடல் வரிகள்தான் எழுதி வந்தார். கங்கை அமரன் பாடல் எழுதிய பல பாடல்கள் ஹிட் அடித்தன. அதிலும் உன் பார்வையில் ஒராயிரம், மண்ணில் இந்த காதல் அன்றி போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

பிறகு கங்கை அமரன் இசையமைப்பாளரான பிறகு 1982 ஆம் ஆண்டு வாழ்வே மாயம் திரைப்படத்திற்கு இசையமைத்தார். கங்கை அமரனை போல கமலும் சினிமாவில் அனைத்து துறைகள் குறித்தும் ஞானம் உள்ளவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசனுக்கு தடை

எனவே அந்த காலக்கட்டத்தில் கமல்ஹாசனை வைத்து படம் எடுக்கும்போது இயக்கம், இசை அனைத்திலும் அவரது பங்கும் இருக்கும். வாழ்வே மாயம் படத்தின் அனுபவத்தை கங்கை அமரன் ஒரு பேட்டியில் பகிர்ந்துக்கொண்டபோது அவரிடம் ”படத்தின் பாடல்களை கமலுக்காக மாற்றி உள்ளீர்களா?” என கேட்டார்கள்.

உடனே கங்கை அமரன் நாங்கள் கமலை இசையமைக்கிற இடத்துக்குள்ளேயே விட மாட்டோம். அவருக்கு அனுமதி கிடையாது. வாழ்வே மாயம் பாடல்கள் எல்லாம் முழுக்க முழுக்க நான் போட்டதுதான். அது மட்டுமின்றி அந்த படம் முடியும் வரை கமல்ஹாசனும் இசையமைக்கும் பகுதிக்கே வரவில்லை என கூறியுள்ளார் கங்கை அமரன்.

Continue Reading

More in Cinema News

To Top