Categories: Cinema News latest news

அமரன்ல பாதி கூட கலெக்ஷனை எட்டாத கங்குவா… தனுஷால தப்பித்த சூர்யா!

கங்குவா படத்தை வெளியாகும் முன்பே படம் சரியா போகாதுன்னு கணித்தவர் வலைப்பேச்சாளர் பிஸ்மி. ஆரம்பத்தில் இதற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தபோதும் படம் வெளியானதும் சொன்னவர்கள் வாயை மூடிக் கொண்டார்கள். ‘பிஸ்மி ஒரு தீர்க்கத்தரிசி’ன்னு கூட சொன்னாங்களாம். கங்குவா பற்றி தற்போது பிஸ்மி என்னென்ன சொல்றாருன்னு பாருங்க.

தனுஷ் விவகாரத்தால்

Also read: Bigg boss Tamil: கன்டென்ட் கிடைக்க விடாமல் செய்யும் விஜய்சேதுபதி… தொடரும் எதிர்ப்புகளை சமாளிப்பாரா?

கங்குவா படத்துக்கு வந்த நெகடிவ் விமர்சனங்கள் நயன்தாரா தனுஷ் விவகாரத்தால் கொஞ்சம் மறைந்து போனது. அதனால ஞானவேல் ராஜாவும், சூர்யாவும், சிறுத்தை சிவாவும் நயன்தாராவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லணும்.

திரைத்துறையை நாசம்

கங்குவா படமே கோளாறான படம். சவுண்டு சரி பண்ணிட்டா மட்டும் அது உன்னதமான படமாகி விடாது. என்னைப் பொருத்தவரை யார் மீதும் தனிப்பட்ட வன்மம் கிடையாது. நான் சினிமாவின் காதலன். அற்புதமான திரைத்துறையை நாசம் பண்ணும்போது நமக்குக் கோபம் வரும். அதனால் தான் திரைத்துறையில் நடக்கிற பல்வேறு நெகடிவ் விஷயங்களை அம்பலப்படுத்துறேன்.

Kanguva

கங்குவாவைப் பொருத்தவரைக்கும் இது மக்களை ஈர்க்குற கன்டென்ட் கிடையாது. சிறுத்தை சிவா ஒண்ணும் ராஜமௌலி மாதிரி படங்களை இயக்குறவர் கிடையாது. படத்தில் நான் பாசிடிவா பார்;த்த விஷயம் படக்குழுவோட உழைப்பு தான். அந்த உழைப்பை நாம நிராகரிக்க முடியாது.

Also read: வைரலாகும் நாகசைதன்யா- சோபிதா திருமண பத்திரிக்கை?!… இது உண்மைதானா!… ரசிகர்கள் குழப்பம்..!

அதுக்கு சரியான கன்டென்ட் கிடைச்சிருந்தா அதுக்கு மிகப்பெரிய பலன் கிடைச்சிருக்கும். அதுல எனக்கு வருத்தம் கூட உண்டு. தமிழகத்தில் 8.25 கோடி தான் கிடைச்சிருக்கு. அமரன் படம் 16 கோடி கலெக்ட் பண்ணி இருக்கு.

அமரன்ல பாதி 

அமரன் படத்துல பாதி கூட கங்குவா கலெக்ட் பண்ணலங்கறது தான் உண்மை. இந்த லட்சணத்துல 2000 கோடின்னு சொல்லிருக்காங்க. விநியோகஸ்தர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகையாக ரூ.100 கோடி வருமாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v