Connect with us
Garudan

Cinema News

எப்பா சூரி நீயா இப்படி நடிச்சிருக்கே? படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை..! பயில்வான் விமர்சனம்

இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் கருடன். சூரி, சசிக்குமார், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் விமர்சனத்தை பயில்வான் ரங்கநாதன் இப்படி சொல்கிறார்.

அனாதையா நிக்கிறவரு சூரி. 10 வயசுல இவருக்கு சோறு போட்டு வளர்க்குறவரு உன்னி முகுந்தன். அதனால அவருக்காக உயிரையேக் கொடுக்குறவரு தான் சூரி. உன்னிமுகுந்தனின் நெருங்கிய நண்பர் சசிக்குமார். அந்த ஊரில் உள்ள கோவிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருக்கு. அந்த சொத்தை ஆட்டையப் போடுறதுக்கு அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் திட்டம் போடுறாரு. அதுக்கு மைம்கோபிக்கிட்ட சொல்லி சொத்துப்பத்திரத்தை எடுத்துட்டு வரச்சொல்றாரு.

Garudan 2

Garudan 2

உன்னி முகுந்தனின் மனைவிக்கு எப்படியாவது சொத்து சேர்க்கணும்னு ஆசை வரும். அதனால் தன் கணவனுக்கு தூபம் போட அவரும் மயங்கி விடுகிறார். அதனால் அந்த சொத்தை எப்படியாவது ஆர்.வி.உதயகுமாரிடம் கொடுக்கணும்னு போராடுறார். சொத்தைக் கோயிலுக்கேக் கொடுக்கணும்னு சசிக்குமார் போராடுறார். இதுல சூரியோட பங்கு என்ன என்பது தான் கதை.

முதல் 15 நிமிடம் சமுத்திரக்கனி வருகிறார். இன்ஸ்பெக்டராக வரும் அவர் தனது ராஜினாமா லட்டரைக் கொடுக்கிறார். அதற்கான காரணத்தையும் எழுதிக் கொடுக்கிறார். அது சஸ்பென்ஸா இருக்கும். படம் முழுவதும் சசிக்குமார் ஹீரோவாக வருகிறார். இடைவேளைக்குப் பிறகு சூரி ஹீரோவாக வருகிறார்.

இதுல ரொம்ப உருகிப்போய் நடிச்சிருக்கார். எஜமானின் விசுவாசத்தை நன்றியுள்ள நாய் பேசி நடிச்சா எப்படி இருக்குமோ அப்படி நடிச்சிருக்கார். சண்டைக்காட்சியிலும் அபாரமாக நடித்துள்ளார். வில்லனாக வரும் உன்னி முகுந்தன் மலையாள வாடை இல்லாமல் பேசியுள்ளார்.

ஜூனியர் என்டிஆர் மாதிரியே இருக்கிறார். நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க. சசிக்குமாரின் மனைவி மிக அழகாக நடித்துள்ளார். சூரியை டான்ஸ் ஆட வைக்கல. யுவனின் இசை தாலாட்ட வைக்கிறது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு ‘பளிச்’சுன்னு இருக்கு. படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் திருப்பங்களில் அழகாக எடுத்துள்ளார். அவரது வசனமும் சூப்பர் தான். கதை வெற்றிமாறனுடையது.

இதையும் படிங்க… எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத இந்தியன் படத்தின் அந்தக் காட்சி… அடுத்தடுத்த பாகத்திலும் தொடருமா?

கருடன் பெருமாள் கோவிலில் பறக்கும். கும்பாபிஷேகத்தின் போது பறக்கும். ஆனால் அம்மன் கோவிலில் கடைசியாக பறக்க விட்டுருப்பாங்க. படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை. நவரசத்தையும் காட்டிய சூரி தாடி வைக்காமல் இருந்தால் நல்லாருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top