Gatta Kushit2: 3வது நாளில் அதிகரித்த வசூல்!.. கட்டா குஸ்தி 2 கலெக்‌ஷன் அப்டேட்!...

 
gattta kusthi2


செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து 4 வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. கேரளாவில் பிரபலமான கட்டா குஸ்தி போட்டியை அடிப்படியாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தனர். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.  

தற்போது 4 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை கட்டா குஸ்தி 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே, ஒவ்வொரு நாளும் வசூல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சனிக்கிழமை இந்த படத்திற்கு 4.95 கோடி வசூல் கிடைத்தது. அதேநேரம், ஞாயிற்றுக்கிழமையான நேற்று இப்படம் 6.25 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.மொத்தத்தில் 3 நாட்களில் இப்படம் 18.78 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Tags

From Around the web