'கட்டா குஸ்தி 2'-வின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

 
gatta kusthi 2

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் 2022-ஆம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம் தான் 'கட்டா குஸ்தி'.

இப்போது இதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாகம் ரெடியாகியிருக்கிறது. இதில் முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், கருணாஸ், கருணாகரன், யோகி பாபு, முனிஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இதன் டீசரும், ஷான் ரோல்டன் இசையில் 'சம்பவக்காரி' பாடலும் வெளியாகி ரசிகர்களின் லைக்ஸை குவித்தது. இந்த படம் வருகிற ஜூலை மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை இன்பன் உதயநிதியின் 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக விஷ்ணு விஷாலே எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

From Around the web