நெட்பிளிக்ஸில் தொடர்ந்து 20 நாட்களாக டிரெண்டிங்கில் கட்டா குஸ்தி 2
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. செல்லா அய்யாவு இயக்கிய இப்படம், விளையாட்டு, குடும்ப உறவு, திருமண வாழ்க்கை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு நகைச்சுவையாக உருவாகியுள்ளது.
கடந்த ஜூலை 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் சரி, வசூலிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. வெளியான 10 நாட்களிலேயே உலகளவில் ரூ.44.5 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. பின்னர் மூன்று வார திரையரங்கு ஓட்டத்தின் முடிவில் உலகளவில் ரூ.55 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ப்படங்களில் இந்த படமே அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்குகளில் கல்லா கட்டியதை தொடர்ந்து கட்டா குஸ்தி 2 ஜூலை 31-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படத்தை வெளியிட்டனர்.

நெட்பிளிக்ஸில் வெளியான பிறகும் படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 2 மற்றும் 4 தேதிகளின் Netflix Top 10 பட்டியல்களில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கட்டா குஸ்தி 2 டாப் திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. குறிப்ப்பாக கடந்த 20 நாட்களாக இந்திய அளவில் டாப்ப் 10 படங்களில் கட்டா குஸ்தி 2 இடம்பெற்றுள்ளது..
திரையரங்கில் வசூல் வேட்டை நடத்தியதைத் தொடர்ந்து தற்போது ஓடிடியிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் கட்டா குஸ்தி 2 , தொடர்ந்து டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருவது படக்குழுவினருக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.