70, 80களில் காமெடியில் சக்கப்போடு பட்ட மன்னர் நடிகர் கவுண்டமணி. இவர் இல்லாத படங்கள் என்று ஒன்றுமே இருந்தது இல்லை அந்த காலங்களில். இவர் இருக்கிறாரா என்று கேட்டு நடிக்கும் நடிகர்களும் உண்டு. ரசிகர்களால் கவுண்டர் மஹான் என அன்பாய் அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி.
இவர் சினிமாக்களில் அரசியலில் புகுந்து விளையாடுவார் இவர் நகைச்சுவை மூலம். அரசியலில் நாம் பேச நினைப்பதை பேச முடியாது, சொல்ல நினைப்பதை சொல்ல முடியாது, தட்டிக் கேட்க நினைப்போம்.அது முடியவே முடியாது. ஆனால் கவுண்டமணி எல்லாவற்றையும் தன் நகைச்சுவை மூலம் அதை நிரூபித்துக் காட்டினார். இப்ப உள்ள அரசியல் நிலைமைகளை தன் காமெடி மூலம் அப்பவே மக்களுக்கு காண்பித்து உள்ளார். இவருக்கு பக்க பலமாக இருந்தவர் நடிகர் செந்தில். இரண்டு பேரின் நகைச்சுவை எட்டுத் திக்கும் பரவி மக்களை எப்பொழுதுமே சிர்க்க வைத்தது.
சினிமாவில் அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ள இவர் இதுவரைக்கும் சேர்ந்து நடிக்காத ஒரு நடிகர் யாரென்றால் ட்.ஆர். ராஜேந்திரன் தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததே இல்லையாம். காரணம் ட்.ஆர் யாரையும் அவர்கள் இல்லாத போது அவர்களை பற்றி புறம் பேசமாட்டாராம். கிண்டல் அடிப்பது, கலாய்ப்பது என எதுமே பண்ணமாட்டாராம்.
ஆனால் கவுண்டமணி அப்படி இல்லை.சகட்டுமானைக்கு அனைவரையும் பாரபட்சம் இல்லாமல் கிண்டல் பண்ணி பேசும் நடிகர். சேர்ந்து நடித்திருந்தால் ஒரு பிரளயமே உருவாகியிருக்கும். அதனால் இருவருக்கும் செட் ஆகியிருக்காது என திரைவட்டாரங்கள் கூறுகின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…