×

லாப மழையில் கௌதம் மேனன்... "கார்த்திக் டயல் செய்த எண்" எத்தனை லட்சம் ஈட்டியது தெரியுமா?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பல ஹீரோக்கள் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சான்ஸிற்காக காத்திருப்பார்கள். அந்தவகையில் தமிழ் இயக்குனர்களிலேயே சற்று வித்யாசமாக , ஸ்டைலீஷாகப் படம் பண்ணுபவர் கெளதம் வாசுதேவ் மேனன்.

 

இவரது இயக்கத்தில் வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம், மின்னலே வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா’ இப்படி தான் இயக்கிய அத்தனை படத்திலும் அந்தந்த காதலுக்கு உயிர் கொடுத்து உருவாக்கியிருப்பர். இந்நிலையில் தற்போது இந்த கொரோனா லாக்டவுனில்  ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை  இயக்கி VTV கார்த்திக் - ஜெஸியை நம் கண் முன் நிறுத்தினார்.

வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே கொண்ட இந்த குறும்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.  இந்தக் குறும்படம் Youtube ல் இதுவரை 7 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்கள் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த குறும்படத்தால் இயக்குனர் கௌதம் மேனன் ரூ. 20 லட்சத்துக்கும் மேல் சம்பாதித்துள்ளதாக என்று பிரபல யூடியூப் சேனல் விமர்சகர் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு சான்ஸ் குடு தொடர்ந்து அடுத்தடுத்து இந்த கொரோனா ஊரடங்கில் கெளதம் மேனனின் இயக்கத்தில் பல காதல் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News