ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களால் நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக், குடி பழக்கத்தால், பட வாய்ப்புகளை இழந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. தற்போது சினிமாவில் இருந்து விலகியிருக்கிறார்.
ஊட்டியில் படப்பிடிப்பின் போது ராகினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கார்த்திக், அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்துவிட்டு, முதல் மனைவியின் தங்கையான ரதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவரது முதல் மனைவியின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க- எஸ்.ஏ.சி-யிடம் விஜய் வைத்த வேண்டுகோள்.. அப்பா மீது இவ்வளவு பாசமா?.. இவர போயா அடிக்கிறீங்க!…
இவருக்கும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டர். திருமணத்திற்கு கடைசி நேரத்தில் தான் கார்த்திக் வந்தார். அவர் பெரிதாக இந்த திருமணத்தில் ஈடுபடவில்லை என்று செய்திகள் வெளியானது. கௌதம் கார்திக்கிற்கும், கார்த்திக்கிற்கும் இடையே ஏதோ பிரச்சனை என்று கூறப்பட்டது.
இந்தநிலையில், அந்த தகவல் உண்மை தான் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாகவே, இருவருக்கும் இடையே சரியான பேச்சு வார்த்தை இல்லை. கௌதம் கார்த்திக் தந்தை மீது கோபத்தில் இருக்கிறார்.
தாயை தனியாக தவிக்க விட்டுவிட்டு, அவரது தங்கையையே திருமணம் செய்துகொண்டதாலும், சிறுவயதில் இவரை வந்து பார்க்கவே இல்லை என்பதாலும், தனிமையில் வளர்ந்த கௌதம் கார்த்திக் இன்று வரை தந்தை கார்தத்இக் மீது கோபத்தில் தான் இருக்கிறார். ஒரு பேட்டியில் இதை அவரே கூறியுள்ளார்.
திருமணத்திற்கு தந்தை தரப்பில் இருந்து 75 பேர் மட்டுமே வர வேண்டும் என்று கௌதம் கார்த்திக் கூறி விட்டார். நடிகர் கார்த்திக்கிற்கு மகனின் திருமணத்தை விமர்சையாக, எல்லா சினிமா பிரபலங்களையும் அழைத்து செய்ய வேண்டும் என்று ஆசை. கௌதம் கார்த்திக் அதனை மறுத்துவிட்டார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- தளபதி 68 பூஜையே போடல!.. அதுக்குள்ள இத்தனை கோடிக்கு போனியாகிடுச்சா!.. ஆனால், விஜய் காரணம் இல்லையாம்!..
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…