Categories: Cinema News latest news

நவசர நாயகனுக்கு அப்படியே நேர் எதிர்… கௌதம் கார்த்திக் இப்படிபட்ட ஒரு நடிகரா!… இது தெரியாம போச்சே…

நவரச நாயகன் என்று புகழப்படும் கார்த்திக், ஒரு காலகட்டத்தில் இளம்பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர். அவரின் உடல் மொழியையும் வசனம் பேசும் ஸ்டைலையும் ரசிப்பதற்கு பல ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

Karthik

ஒத்துழைப்பு தராத கார்த்திக்

எனினும் பல தயாரிப்பாளர்கள் கார்த்திக்கின் மீது வைக்கப்படும் புகார்கள் என்னவென்றால், கார்த்திக் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தரமாட்டார் என்றும் திடீரென அறையை பூட்டிக்கொண்டு போதையில் படுத்துக்கிடப்பார், படப்பிடிப்பிற்கே வரமாட்டார் என்றும் கூறுவார்கள். இதனால் பல தயாரிப்பாளர்கள், நஷ்டம் ஏற்பட்டதாக கூறுவார்கள். என்னதான் கார்த்திக் சிறந்த நடிகராக இருந்தாலும் அவர் மீது இப்படிப்பட்ட பல விமர்சனங்கள் உண்டு.

இந்த நிலையில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக், குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கௌதம் கார்த்திக் மிகவும் ஒழுக்கமான நடிகராம். காலை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அவர் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிடுவாராம். சண்டைக் காட்சிகளில் எதுவும் அடிபட்டால் கூட வெளியே சொல்லமாட்டாராம். இரவு பகல் என்று நேரம் பாராமல் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு கொடுப்பாராம் கௌதம் கார்த்திக்.

Gautham Karthik

நேர் எதிரான கௌதம் கார்த்திக்

உதாரணமாக “தேவராட்டம்” திரைப்படத்தை 80 நாட்களில் முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால் 52 நாட்களிலேயே அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். அதற்கு கௌதம் கார்த்திக்கின் முழு ஒத்துழைப்பும்தான் முக்கிய காரணமாம். இவ்வாறு கௌதம் கார்த்திக் குறித்த அரிய தகவல் வெளிவருகிறது. கார்த்திக் மீது தயாரிப்பாளர்கள் வைக்கும் விமர்சனங்களுக்கு நேர் எதிராக இருக்கிறார் அவரது மகனான கௌதம் கார்த்திக் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

Arun Prasad
Published by
Arun Prasad