Categories: Cinema News latest news

அந்த படம் மாதிரி ஒரு கதை சொல்லுங்க- விஜய் சொன்ன அந்த வார்த்தையால் கடுப்பான கௌதம் மேனன்…

தமிழ் சினிமாவில் டிரெண்ட் செட்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது திரைப்படங்களில் காதல் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். மேலும் ஒவ்வொரு காட்சியும் மிகவும் ஸ்டைலிஷாக படமாக்குவார். அதே போல் இவரது திரைப்படங்களில் இடம்பெறும் வாய்ஸ் ஓவர்கள் மிகப் பிரபலமானவை. இணையத்தில் பலரும் அதனை கேலி செய்வதும் உண்டு.

கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது ஒரு நடிகராக மிகவும் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் கூட “விடுதலை” திரைப்படத்தில் காவல் அதிகாரியாக மிக சிறப்பாக நடித்திருந்தார். தற்போது விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் வாசுதேவ் மேனன், விஜய்யை வைத்து “யோஹன் அத்தியாயம் ஒன்று” என்ற திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படம் நின்றுபோனது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட செய்யாறு பாலு, விஜய்க்கும் கௌதம் மேனனுக்கும் நடந்த ஒரு உரையாடல் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது கௌதம் மேனனிடம் விஜய், “சிவகாசி” திரைப்படத்தை போல் ஒரு கதையை கூறுங்கள் என கூறியிருக்கிறார். இதனை கேட்டதும் கௌதம் மேனன் கடுப்பாகிவிட்டாராம். “யார் கிட்ட வந்து இப்படி கேட்குறீங்க? நான் எப்படிபட்ட டைரக்டர் தெரியுமா?” என கடிந்துகொண்டாராம். அதன் பின் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று அவர் நினைக்கவே இல்லையாம்.

Arun Prasad
Published by
Arun Prasad