×

கீர்த்தி சுரேஷுடன் கைகோர்த்த கௌதம் மேனன் !

கௌதம் மேனன் இயக்கும் புதிய விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

 

கௌதம் மேனன் இயக்கும் புதிய விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிறந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ரஜினி நடிக்கும் படம் மற்றும் பெண்குயின் ஆகிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதையடுத்து இப்போது கௌதம் மேனன் இயக்கும் புதிய விளம்பரப் படம் ஒன்றில் அவர் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தையல் எந்திரத்தின் விளம்பரத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் படம் விரைவில் ரிலிஸாகும் எனத் தெரிகிறது. கடன் பிரச்சனைகளால் சிக்கித் தவிக்கும் கௌதம் மேனன் அந்த சுமைகளை தவிர்ப்பதற்காக நடிப்பு மற்றும் விளம்பரப்பட இயக்கம் என வெவ்வேறு தளங்களில் இயங்கி வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News