×

சிவாவுடன் கைகோர்க்கும் கவுதம் மேனன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கவுதம் மேனன். இயக்குனர் மணிரத்தினத்திற்கு பிறகு தனது ஸ்டைலிஷ் பிலிம் மேக்கிங் வாயிலாக கோலிவுட் ரசிகர்களை கட்டிப்போட்டது என்றால் அது கவுதம் மேனன்தான் என்று கூட நாம் சொல்லலாம்.
 
 
Gautham menon

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கவுதம் மேனன். இயக்குனர் மணிரத்தினத்திற்கு பிறகு தனது ஸ்டைலிஷ் பிலிம் மேக்கிங் வாயிலாக கோலிவுட் ரசிகர்களை கட்டிப்போட்டது என்றால் அது கவுதம் மேனன்தான் என்று கூட நாம் சொல்லலாம்.
 
மின்னலே படத்தின் வாயிலாக சினிமாவில் நுழைந்த இவர்க்கு திருப்பு முனையாக காக்க காக்க படம் அமைந்தது. சமீபத்தில் சில ஆண்டுகளாக கோலிவுட்டில் இவர் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது என்னவோ உண்மை தான். ஒருபுறம் பட தயாரிப்பில் இறங்கி சிக்கலில் மாட்டினார், மறுபுறம் இவர் இயக்கிய படங்களும் ரிலீஸ் ஆகாமல் பெரிய போராட்டக்களம் ஆனது.

இவர், தமிழ் திரையுலகிற்கு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படம் சரியாக ஓடவில்லை. கவுதம் மேனன் தற்போது சிம்புவுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து 'வெந்து தணிந்தது காடு' எனும் படத்தை இயக்கி வருகிறார். 

sivakarthikeyan
sivakarthikeyan-cinereporters

இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கவுள்ள படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே, இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் முதல் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் காமெடியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கு கவுதம் படம் செட் ஆகாது என விமர்சனங்கள் வருகிறது. கவுதமுக்கு கடைசியாக வெளியான படங்கள் ஏதும் சரியாக ஓடாததால்தான் சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என கூறுகிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள, டாக்டர், அயலான் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது..;+

From around the web

Trending Videos

Tamilnadu News