×

கடனிலிருந்து மீண்ட கௌதம் மேனன் - எப்படி தெரியுமா?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கடந்த சில ஆண்டுகளாக கடனில் இருந்ததால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தார் என்பதுதான் கோலிவுட்டின் செய்தி. இந்த நிலையில் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை ரிலீஸ் செய்ய ஐசரி கணேஷ் உதவி செய்ததால் தற்போது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது

முதல் கட்டமாக அவர் இயக்கி வரும் ’தலைவி’ என்ற வெப்சீரிஸ் மிகப்பெரிய ஹிட்டானதை அடுத்து மீண்டும் ஒரு வெப் சீரீஸ் இயக்கி  தரும்படி அதே தொலைக்காட்சி நிறுவனம் கூறி இருப்பதாகவும் அதற்காக அவருடைய சம்பளம் ரூபாய் 20 கோடி பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது 

எனவே அவர் தனக்கு இருந்த மொத்த கடனையும் இந்த சம்பளத்தில் இருந்து அடைத்துவிட்டதாகவும் தற்போது அவர் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு, மீண்டும் உற்சாகமாக அடுத்தகட்ட பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து இனிமேல் தயாரிப்பில் இறங்காமல், முழுக்க முழுக்க படங்கள் இயக்குவது, நடிப்பது ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். மேலும் முன்னணி நடிகர்களுக்கு அவர் கதை கூறி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் கௌதம் மேனனுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று கூறப்படுகிறது

From around the web

Trending Videos

Tamilnadu News