லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் , நரேன் உட்பட பலரும் நடித்திருக்கும் படம் விக்ரம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தில் நடிகை காயத்ரி பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். நீண்ட நாள்களுக்கு பிறகு கமலின் கெரியரில் நல்ல வரவேற்பை தந்த படமாக விக்ரம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் நடிகை காயத்ரி லோகேஷின் சில விஷயங்களை பகிர்ந்தார். அவர் கூறுகையில் அந்த படத்தில் நடிக்கும் போது எந்த வசனம் ,எப்படி எடுக்க போறீங்கனு காயத்ரி கேட்பாராம். ஆனால் லோகேஷ் அதை பொருட்படுத்தாமல் இதுதான் ஷார்ட் எப்படியாவது நடிங்கனு சொல்லிவிட்டு மானிட்டர் பக்கத்தில் போய் உட்கார்ந்து விடுவாராம்.
ஆனால் விஜய் சேதுபதி காயத்ரியின் கழுத்தை அறுக்கும் காட்சியில் கூடவே இருந்து நல்லா அறுங்க, இரத்தம் பீறீட்டு வெளியே வரனும், ஸ்ப்ரே அடிக்கிற மாதிரி இருக்கனும்னு சொல்லி பாடாய்படுத்தி விட்டாராம். இதனால் லோகேஷ் மேல் கொஞ்சம் வருத்தம் தான் என கூறினார்.
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…
ரஜினி கமல்…