×

PSBB பிரச்சணையை... விஷாலை வம்பிழுக்கும் காயத்ரி!..

PSBB பிரச்சணை தொடர்பாக பேசிய விஷாலை காயத்ரி திட்டி தீர்த்துள்ளார்.
 
vishal-gayathri2952021m

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ஒருவர், அந்த பள்ளியின் மாணவிகளிடம் சமூக வலைத்தளம் மூலமாக அத்துமீறி பேசியது மிக பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஷால், "PSBB-ன் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. அந்த பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைக்கிறது, பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோரிமும் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை, இதுபோன்ற குற்றங்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று விஷால் பதிவிட்டு இருந்தார்.

இதனையடுத்து தற்போது காயத்ரி ரகுராம், “சினிமா துறையில் இருக்கும் நீங்கள் முதலில் அங்கு நடக்கும் துன்புறுத்தல்களை கண்டியுங்கள். புதிதாக இத்துறைக்குள் நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள் விஷால்.

முன்னணி நடிகைகள் மீதான துன்புறுத்தலைப் பாருங்கள். பயன்படுத்தி தூக்கி எறிய, நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே இடத்திலிருந்து வருகிறீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறை யின் காரணமாக உண்மையில் பெண்கள் உங்களைப் பார்த்து ஓடுகிறார்கள்” எனத் பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News