வாய்ப்பே இல்லை... மலையாளக் கரையோரம் ஒதுங்கிய விஜய் சேதுபதி நடிகை!

கர்நாடக மாநிலம் பெங்களூவைப் பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை காயத்ரி. 18 வயசு படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானாலும் இவரை லைம் லைட்டில் கொண்டு வந்தது விஜய் சேதுபதி நடித்த `நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படம்தான். அதன் பிறகு பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் மற்றும் வெள்ள ராஜா வெப்சீரிஸில் நடித்தார்.
விஜய் சேதுபதியுடன் அதிக படங்களில் நடித்திருக்கும் காயத்ரிக்கு கோலிவுட்டில் பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சமீபகாலமாக தவித்து வருகிறார். இந்தநிலையில், மல்லுவுட்டில் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தைத் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்குனர்கள் இருவர் இணைந்து இயக்குகிறார்கள். அந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரதீஷ் பாலகிருஷ்ணன், தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். குஞ்சாக்கோ கோபன் ஹீரோவாக நடிக்கும் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க காயத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இது அவர் மலையாளத்தில் அறிமுகமாகும் படமாகும்.