Categories: Cinema News latest news throwback stories

4 கல்யாணம்… 5 காதல்… ரீலில் மட்டுமல்லாமல் ரியல் லைஃபில் பக்கா காதல் மன்னனான ஜெமினிகணேசன்!…

Gemini Ganesan: தமிழ் சினிமாவின் முதல் காதல் மன்னன் என்று ரசிகர்களால் அறியப்பட்டவர் ஜெமினி கணேசன். அவர் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் நிறைய பேருடன் காதலில் இருந்தார். அவர் வாழ்க்கையில் அதிகாரப்பூர்வமாக இருந்தார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் ஜெமினி கணேசன். 50 வருடமாக திரைத்துறையில் இருந்தவர் 200க்கும் அதிகமான படங்கள் நடித்து இருக்கிறார்.  எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி போல இல்லாமல் நாடக நடிகராக பயிற்சி பெறாதவர் ஜெமினி கணேசன். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடா, மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

இதையும் படிங்க: கோட் இரண்டாவது சிங்கிள் எப்போ தெரியுமா? விசில் போடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

நடிப்பால் மட்டுமல்லாமல் காதல் கதைகளுக்கும் ஜெமினி கோலிவுட்டில் பிரபலமானவர். முதலில் அவருக்கு 19 வயதில் அலமேலு என்பவருடன் திருமணம் நடந்தது. அத்தம்பதிக்கு ரேவதி, கமலா, ஜெயலட்சுமி என்ற மூன்று மகள்கள் இருந்தனர். பின்னர் புஷ்பவள்ளியை திருமணம்செய்து கொண்டவருக்கு பாலிவுட் நடிகை ரேகா மற்றும் ராதா என்ற மகள்கள் இருக்கின்றனர்.

இதையடுத்து தான் தமிழ் நடிகை சாவித்ரிக்கும், ஜெமினி கணேசனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திரை வட்டாரங்களிலே நெருக்கமாக வலம் வந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர். இதை தொடர்ந்து ஜெமினி கணேசன் சும்மா இருக்காமல் நடிகை ஒருவருடன் உறவில் இருந்தாராம். அந்த நடிகை ராஜஸ்ரீ எனக் கூறப்படுகிறது. இருவரும் வெளிநாடுகளுக்கு ஒன்றாகவே பறந்தார்களாம்.

இதையும் படிங்க: கண்ணதாசனுக்கு தட்டிய பொறி!… அத்தனை ராமன்களும் வரிசையாக வந்துட்டாங்க… என்ன பாடல்னு தெரியுமா?..

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily