Connect with us
jemini

latest news

நல்லா இருந்த எங்க குடும்பத்தை கலைச்சவ சாவித்திரி.. ஜெமினி கணேசனின் மகள் ஆவேசம்

தமிழ் சினிமாவின் லவ்வர் பாய் ஜெமினி கணேசன். வசதியான குடும்பத்தில் பிறந்த ஜெமினி கணேசன் தனது கல்லூரி படிப்பை முடித்த பின்பு சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பணியாற்றினார். அந்த காலத்தில் நாடகங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் சினிமா மீது இவருக்கு ஆசை வந்தது. அதன் காரணமாக சினிமா படங்களை தயாரிக்கும் ஜெமினி ஸ்டுடியோவில் புது முகங்களை தேர்வு செய்யும் கேஸ்டிங் டைரக்டராக பணியாற்றினார்.

1947 ஆம் ஆண்டு மிஸ் மாலினி என்னும் திரைப்படத்தில் முதல் முறையாக சிறிய வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்தார். ஆரம்பகால படங்களில் அவரது பெயர் ஆர்.கணேஷ் என்று இருந்தது. பராசக்தி மூலமாக தமிழ் தமிழ் திரையுலகத்திற்கு வந்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே அழைக்கப்பட்டார். பெயர் குழப்பம் வருவதை தவிர்க்க, தான் முதலில் வேலை பார்த்த கம்பெனி பெயரை தனது பெயருடன் வைத்து ”ஜெமினி கணேசன்” என்று மாற்றிக் கொண்டார்.

தொடர்ந்து கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. இயக்குனர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என தனக்கு கிடைக்கப் பெற்ற வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி மக்கள் மனதில் தனி அடையாளங்களை பெற்றார். இவரது திருமண வாழ்க்கை பொருத்தவரை தன் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த பாப்ஜி என்ற அலமேலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி என நான்கு பெண்கள் பிறந்ததார்கள். அதன் பிறகு தன்னோடு நடித்த புஷ்பவல்லி என்பவரோடு வாழ்ந்தார். இவர்களுக்கு இரண்டு பெண்கள். அதன் பிறகு மனம் போல் மாங்கல்யம் என்ற படத்தில் தன்னுடன் நடித்த ’சாவித்திரி’ என்ற நடிகையோடு வாழ்ந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர்.

இந்நிலையில் ஜெமினி கணேசனின் மூத்த மனைவியின் மகள் கமலா நடிகை சாவித்திரி மீது குற்றம் சாட்டியுள்ளார். அதில் ,”சாவித்திரி ஒரு ராத்திரி கொட்டும் மழையில வீட்டுக்கு வந்தப்ப, அவங்க கெட்டுப் போக கூடாதுன்னு தாலி கட்டி ஒரு அந்தஸ்தை கொடுத்தார் எங்க அப்பா ஜெமினி கணேசன். அவளுக்கு தமிழே பேச தெரியாது. அவளுக்கு கையெழுத்து போட கத்து கொடுத்து, கார் ஒட்ட சொல்லிக் கொடுத்து, கௌரவமா எங்க அப்பா வாழ வச்சாரு”.

”ஆனா அவ கல்யாணம் ஆகி இரண்டு பசங்க இருக்குன்னு தெரிஞ்சும் அப்பாவை காதலிச்சு அப்பாவ பிளாக்மெயில் பண்ணி 15 வருஷம் எங்கள வீட்டுக்கே வரவிடாமல் பண்ணா.. நல்லா இருந்த எங்க குடும்பத்தையே கலைச்சவ தான் சாவித்திரி”. என்று கமலா கூறியுள்ளார். திரைப்படங்களில் காதல் மன்னனாக வாழ்ந்த ஜெமினி நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்துள்ளார். திரை வாழ்க்கை பொருத்தவரை கடைசியாக இவர் கமல்ஹாசனின் அவ்வை ஷண்முகி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top