×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜெனிலியா - அதிர்ச்சியளிக்கும் பதிவு!

நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன் - நடிகை ஜெனிலியா அதிர்ச்சி பதிவு

 

சீனா நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ துவங்கிய கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக பல நாடுகளுக்கு பரவி கோடிக்கணக்கான மக்களை தாக்கி வருகிறது. சாதாரணம் மக்கள் முதல் பெரிய அரசியல்வாதிகள் , நட்சத்திர நடிகர்கள் உட்பட்ட பலரும் இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பலர் அதிலிருந்து  குணமடைந்துள்ளனர். அமிதாப் பச்சன்,  அபிஷேக் பச்சன் , ஐஸ்வர்யா ராய் , எஸ். பி.பி , நடிகர் கருணாஸ் உட்பட பலரும் பாதிக்கப்பட்டவர்கள் தான். இந்நிலையில் தற்ப்போது நடிகை ஜெனிலியா தானும் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை ட்விட்டரில் கூறியுள்ளார்.

அந்த பதிவியில் மூன்று வாரங்களுக்கு முன்னர் தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் இன்று நெகட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதாக கூறி பதிவிட்டுள்ளார். மேலும் கூறிய அவர்,
21 நாட்கள் தொடர்ந்து நல்ல உணவுகளை உட்கொண்டு சிகிச்சை பெற்று குணமடைந்தாக தெரிவித்துள்ளார். ஜெனிலியாவின் இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News