ரியல் லைஃப் ஹாசினி..... இளமை குறையாத ஜெனிலியாவின் சீக்ரெட் என்ன தெரியுமா?
நடிகை ஜெனிலியா:
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஹீரோயினாக இருந்து வரும் நடிகை ஜெனிலியா தற்போது 38 வயதாகிய போதிலும் இளமை குறையாமல் அப்படியே இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை தொடர்ச்சியாக நடித்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக நடிகை ஜெனிலியா அறிமுகமாகி இருந்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுக்க தொடர்ந்து விஜய், பரத், ஜெயம் ரவி உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் சேர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
இளமையின் ரகசியம்:
குறிப்பாக இவரது திரைப்படத்தில் இன்று வரை சந்தோஷ் சுப்பிரமணியம் படம் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. இவர் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான ரித்தீஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஜெனிலியா.

இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இன்னமும் இளமை கூறாமல் அதே அழகோடு சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் பார்த்த ஹாசினியை போன்றே இருக்கிறார். அவரின் இளமையின் ரகசியம் என்னவென்று கேட்டீர்களானால்.... அவரது காதல் கணவர் மிகவும் மகிழ்ச்சியாக அவரை வைத்துக் கொள்கிறாராம் இதுதான் அவரின் இளமையின் ரகசியம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
