33 ஆண்டுகள் கடந்தும் குறையாத மவுசு... மீண்டும் தியேட்டருக்கு வரும் ஜென்டில்மேன்!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றான  அர்ஜூனின்  ஜென்டில்மேன் , வரும்  டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது
 
gentle man

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றான  அர்ஜூனின்  ஜென்டில்மேன் , வரும்  டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. 4K தரத்தில் புதுப்பிக்கப்பட்ட காட்சிகளுடன், Dolby Atmos ஒலி தொழில்நுட்பத்திலும் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், சரண் ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ஜென்டில்மேன். இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் படமான இதனை அப்போதைஅய் பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். 1993ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதலில் இப்படத்தில் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஏனோ சில காரணத்தால் அவர் விலக அர்ஜூன் இப்படத்தில் நடித்தார்.               


பகலில் அப்பளம் செய்யும் தொழிலதிபராக  இருக்கும்  கிருஷ்ணமூர்த்தி என்ற கிச்சா , இரவில் பணக்காரர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் நபராக மாறுகிறார். அவர் ஏன் கொள்ளையடிக்கிறார்? அந்தப் பணத்தை எதற்காக பயன்படுத்துகிறார்? அவரது கடந்த காலத்தில் நடந்த சோகம் என்ன? என்பதோடு  கல்வி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி செந்தில் காமெடி இன்றலவும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. 

gentle man

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது. சிக்கு புக்கு ரயிலே ,  ஒட்டகத்த கட்டிக்கோ ,  என் வீட்டுத் தோட்டத்தில் ,  உசிலம்பட்டி பெண்குட்டி  உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.    வெளியான காலத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற  ஜெண்டில்மேன் 175 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியது. அர்ஜூனின் திரைப்பயணத்திலும், இயக்குநர் ஷங்கரின் சினிமா வாழ்க்கையிலும் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த நிலையில் ஜெண்டில்மேன் வருகிற டிசம்பர் மாதம் 11ம் தேதி உலகமெங்கும் ரீ ரிலிஸ் ஆகிறது. இந்த படத்தின் கதை தற்போதைய கால சூழ் நிலைக்கும் ஏற்றார்போல இருப்பதால் நிச்சயம் இப்படம் மீண்டும் ஒரு நலல் வெற்றியை பெரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web